பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை o 2.3 வினை ஆ செய்த ஒரு செயலானது, தொடர்ந்து ஏதாவது ஒரு பயனைக் கொடுத்து வருவது. நல்ல பயனைத் தருவது நல்வினை. தீய பயனைத் தருவது தீவினை. - வாழ்வுக் குத் தோணியாக, உயர்வுக்கு ஏணியாக அமைந்திருப்பது உடல்தானே. அதனை வாழ்விப்பதும், வீழ் விப்பதும் இருவினைகள்தாமே. இருவினைகளை கட்டுப்படுத்தினால், நமக்கு உடல் தரும் பயன்கள் ஏராளம். எதையும் வேண்டும் என்று விரும்புகிற ஆசையை வெற்றி கண்ட இறைத் தன்மையாளரின் அருஞ்செயல்களைப் பின்பற்றி, பொருள் பொதிந்த அவரது ஞானத்தின் அடியொற்றி வாழ்கில்போது, ஐம்புலன்களையும் அடக்கலாம். ஆவியாகத் திரிந்து பாவியாகச் செய்யும் மனத்தின் கொடும் பண்புகளையும் குலைக்கலாம். வெற்றியில் திளைக்கலாம். s அலைக்கழிக்காத அக இன்பமும், நோயனுகாப்புற இன்பமும் மட்டும் போதாது. அவற்றை விளைவிக்கின்ற இரு வினைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிற புகழைப் (அருஞ்செயலை) பெறுங்கள் என்று இந்த ஐந்தாவது குறளில் வள்ளுவர் வலியுறுத்துகின்றார். 6. பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார். பொருள் விளக்கம்: ஐந்து பொறி வாயில் அவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார் என்று குறளைப் பிரித்திருக்கிறோம். ஐந்து பொறி = ஐம்புலன்களாகிய தீப்பொறி சக்தியை வாயில் = உண்டாகிற வாசலிலேயே அவித்தான் = மீண்டும் பொறி எழுந்து விடாதவாறு அணைத்து விட்டான் பொய்தீர்= போலித்தனமும் ஏமாற்றுத் தனமும் இல்லாத ஒழுக்க நெறி நின்றார் = மீண்டும் ஐம்புலன்களின் அனல் பொறிகள் எழாதவாறு அவித்து விட்டு, தொடர்ந்து நிலையாக அதே தன்மையில் ஒரே நிலையில் வாழ் வார். நீடு வாழ்வார்- செழித்து மேம்பாடு பெற்றுப் பெருகி வாழ்வார். சொல் விளக்கம்: T ஐந்துபொறி = ஐம்புலன்களின் தீப்பொறி சக்தி பொய்தீர் = போலி, ஏமாற்றுத்தனம் இல்லாத