பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 259 சொல் விளக்கம் : ஏதிலார் = பகைவர், அன்னியர்; காண் = உண்மை அறிதல் பின் = பிற்காலம், காரணம், பெருமை; தீது = துன்பம், மரணம் உயிர்க்கு = ஆத்மாவுக்கு முற்கால உரை: ஏதிலாரைப் புறங்கூறுவார், அவர்தம் குற்றம் காணுமாறு போல, தம் குற்றத்தையும் காண வல்லாராயின் நிலை பேறுடைய அவர் உயிர்க்கு வருவதொரு துன்பமுண்டோ? தற்கால உரை: பிறர் குற்றத்தைக் காண்பது போல், "தம் குற்றத்தையும் எண்ணிப் பார்த்தாலே ஒருவருக்குப் புறங்கூறும் பழக்கம் ஏற்படாது. புதிய உரை: தாம் செய்கின்ற குற்றங்களைப் போல்தான், மற்றவர்களும் தவறுகள் செய்கிறார்கள் என்பதை, சூழ்நிலை அறிந்து உணருகிறபோது, அவருக்கு ஆத்ம வேதனையும், சோதனையும் ஏற்படுத்தும் துன்பம் எப்போதும் வருவதில்லை. விளக்கம்: எதிர்பாராமல் தவறிழைப்பது, ஒன்றை எதிர்பார்த்து குற்றம் இழைப்பது. குற்றத்தையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பது என்று பலவகைகள் உண்டு. குற்றத்தை அஷட குற்றம் என்று கூறுவார்கள். அறியாமையால் செய்வது, உணர்ச்சி மிகுதியால் செய்வது, மோகத்தால் செய்வது, வயது கோளாறால் செய்வது, விளங்காதனத்தால் செய்வது. குலப் பண்பாடு என்று கூறிக்கொண்டு குற்றம் இழைப்பது. எதிர்பாராத சந்தர்ப்பங்களில் விபத்துக்களின் காரணமாகச் செய்யப் படுகின்றவை என்பது எட்டு குற்றங்கள் நிகழ்வதற்கான ஏதுகள். பிறர் குற்றத்தை, எப்படி நேர்ந்திருக்கும் என்று ஆராய்கிறபோது, அவருக்குள் ஏற்படுகின்ற ஆத்திரங்கள், அர்த்தமற்ற வீம்புகள் குறையக்கூடும்.