பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


260 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அந்தச் சூழ்நிலையில் தான் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் எப்படித் தவறிழைத்திருப்போம் என்று நினைத்துப் பார்க்கிறபோது, அவரது நெஞ்ச நினைவுகளின் நெருப்பின் வெப்பம் தணிந்தேதான் இருக்கும். அப்போது ஆத்திரப்பட்டு புறம் பேசுகிறபோது ஏற்படுகிற சுவாசத் தடுமாற்றம். அந்தத் தடுமாற்றத்தால் தடம் மாறும் இரத்த ஒட்டம், இரத்த ஒட்டக் குறைவால் ஏற்படும் உள்ளுறுப்புக்களின் செயல் மாற்றம். இப்படி உள்ளுயிராக விளங்குகிற ஆத்மாவிற்கு ஏற்படும் வேதனைகள் மிகுதி. தவறான எண்ணம் தான் ஒருவரை உயிர்வாதனை ஏற்படுத்தித் தண்டிக்கும். ஆகவே, புறங்கூறுகிற புன்மை வாழ்க்கையை விலக்குவதால், பூரிப்பு மிகுந்த பொன்னான வாழ்வு அமைகிறது என்று வள்ளுவர் தனது 10 வது குறளில் முத்தாய்ப்பாகக் கூறி முடிக்கிறார்.