பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 261 20. பயனில சொல்லாமை புறங்கூறாமை என்றால் வீண் வார்த்தை; வெட்டிப் பேச்சு; விவகாரத்தை வளர்க்கும் இழிவான சொல்லுரை; அல்ல வை உண்டாக்கும் அற்பத்தனம் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தப் புறங்கூறும் பழக்கத்தைப் போக்கிவிட மக்களால் முடிவதில்லை; அவர்களும் முயற்சிப்பதில்லை. ஏனென்றால், சுவையான பண்டங்களைச் சாப்பிடுகிறபோது நாக்குக்கு உண்டாகும் சுகமும் மலர்ச்சியும், புறங்கூறும் போதும் வந்து விடுவதால்தான். புறங்கூறாமை பற்றி பேசிய வள்ளுவருக்குப், போதிய மன திருப்தி ஏற்பட வில்லை போலும். புறங் கூறுகிற பேச்சை புறந்தள்ளார்கள். அது வேண்டாத வீண் சொல் என்று வற்புறுத்தவே பயனில் சொல்லாமை எனும் அதிகாரத்தைத் தொடர்ந்து வைத்து, மேலும் வன்மையாக வற்புறுத்திப் பாடுகிறார். s பயனில் சொல் என்பதை இழிசொல் என்கிறார்கள் பழிச்சொல் என்கிறார்கள். நாவில் பிறக்கும் சொற்களுக்கு நான்கு முகங்கள் உண்டு. 1. குறளை, 2. பொய் மொழி, 3 கடுஞ்சொல், 4 பயனில்சொல். இந்த நான்குதான், மக்களது நாவை ஆட்டிப்படைக்கின்றன துற்றிச் சுகிக்கின்றன. 1. குறளை: கொடுவாயிலிருந்து குதித்துவரும் கொடிய சொற்கள், கோபச் சொற்கள், பிறர் மனத்தைப் புண்படுத்தி துடிக்கச் செய்யும் பேய்த் தனமான பேச்சு. 2. பொய் மொழி: வீணான சொற்கள் வாழ்க்கையை வீணாக்கும். வழி நெடுக துண்பங்களை உண்டாக்கும். வேற்றுமைகளை ஏற்படுத்தும். பகைமைகளில் ஆட்படுத்தும். மனிதப் பிறவியையே மாசுபடுத்திவிடும். இப்படிப்பட்ட ஆற்றல்கள் பயனில் சொல்லுக்குப் பெரிதும் உண்டென்பதால் தான், ஒழுக்கமாக வாழ விரும் புவோர். பயனில் சொல்லமாட்டார்கள் என்று வள்ளுவர் நம்பினார்.