பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 265 சொல் விளக்கம்: பயன் - பயம், அர்த்தம், பலன்; சொல்லல் = புகழ்தல், பேசுதல் நயன் - நன்மை, இன்பம், மகிழ்ச்சி, உறவு, நீதி. தீது = பாவம், கொடுமை, மரணம்: நட்டார் = நண்பர் முற்கால உரை: பயனிலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், விருப்பமிலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீதே. தற்கால உரை: நண்பர்களுக்கு வெறுக்கத் தக்கன செய்பவன் எப்படி, இகழப்படுவானோ, அதை விடப் பலர் முன்னிலையில் பயனில்லாத சொற்களைக் கூறுகிறவன் மிகுவாக இகழப்படுவான். புதிய உரை: பயமில்லாமல், அர்த்தமில்லாத கருத்துக்களை அறிஞர்கள் முன்பு புகழ்ந்து பேசுகிற ஒருவனது செயல், நண்பர்களுக்கு நச்சுக்காயம் ஏற்படுத்துகிற செயலைவிட, மிகவும் கொடுமையானதாகும். விளக்கம்: அறிஞர்கள் குழுமியிருக்கும் சபையிலே, அவர்கள் முன்னே அர்த்தமற்ற கருத்துக்களைப் பேசுவதே குற்றம் என்கிறபோது, அதையே பயமில்லாமல் புகழ்ந்து பேசுவது மாபெரும் குற்றம்தானே, அதைத்தான் சொல்லல் என்ற சொல்லால், அழுத்தந் திருந்தமாகக் கூறுகிறார் வள்ளுவர். நண்பர்களிடத்தே தவறு செய்வது நல்லதன்று. அது நம்பிக்கைக்கு எதிரானது. அன்புக்கு மாறானது. பண்புக்கு கூரானது. நண்பர்களிடத்தில் செய்கிற குற்றம், நன்மைக்காகச் செய்யலாம். மகிழ்ச்சிக்காகவும் செய்யலாம். உறவைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ளும் பொருட்டுகூடத் தவறு செய்யலாம். ஆனால், அதைவிடக் கடுமையானது, மடமையானது, கொடுமையானது, அறிவுடையோர் முன் அர்த்த மற்ற சொற்களைப் பேசுதல். அதுவும் தான் கூறவரும் கருத்தில் உள்ள குற்றங்களை மறைத்து, எவர் முன்னே இருக்கிறோம் என்கிற உள்ள நிலையை மறந்து உளறுகின்ற தன்மையை வள்ளுவர் தீது என்கிறார்.