பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 269 அவர்கள் பங்கப்படுவதும், ஆதங்கப்படுவதும், வேதனைப் படுவதும், வெதும் பித் துடிப்பதும், வீறிட்டுக் கிளம்பும் பொல்லாத சாபமாகப் புறப்பட்டு விடும் என்பதைக் குறிக்கவே, நீக்கும் என்ற சொல்லைப் பெய்திருக்கிறார். நன்மையின் நீக்கும் என்ற இரு சொற்கள், அறவோர்களை அல்லல் படுத்தி, ஆற்றாமையை உண்டு பண்ணுகிற அவனது புன்மைச் சொல்லும் செயலும் செய்பவன் வாழ்க்கையைச் சீரழிக்கச் செய்கிறது. பண்பிலாப் பயன் சாரா சொற்களைப் பேசுகிறவன், நற்குணம் இழப்பதால்தான் அப்படிப் பேசுகிறான். அந்தப் பேச்சால் அவனது நன்மார்க்கம், மாறிப் போகிறது. மனத்திலே அமைதி குலைகிறது. உடலிலே சுகம் குறைகிறது. ஆன்மாவும் அலைபாய்கிறது. செழுமைமிக்க சீவனும் பலம் குன்றிப் போகிறது. இப்படியாக அவன் வாழ்க்கை அழிவை நோக்கிப் போகிறது. அதனால் தான், நன்மையின் நீக்கும் என்றார். இன்பம், மகிழ்ச்சி மட்டும் மாறிப் போகாமல், நல்ல நீதியும் கிடைக்காமல், நல்லோர்களின் உறவும் கிட்டாமல், நலிந்து அழிவான் என்று, நான்காவது குறளில், பயனிலாச் சொற்களைப் பேசுகிறவனைப் பழிக்கவும் செய்யவும், சொல்பவரைப் பழிவாங்கவும் செய்யும் என்கிற கருத்தை இக்குறளில் தெளிவிக்கிறார். 195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின். பொருள் விளக்கம்: நீர்மை உடையார் = உலக நடை தெரிந்தவரும், பிறர் மனம் புரிந்த பெருமை குணம் கொண்ட வரும். பயன் இல சொலின் - எதற்கும் பயன்படாத சொற்களைப் பேசுகிறபோது, சீர்மெய் = சித்திரம் போல அழகும், தலைமையான தோற்றம் கொண்ட அவரது தேகம். சிறப்பொடு = அதன் அருமை மேன்மை நிலை (மாறி) நீங்கும் = விலகி, சிதறுண்டு அழிந்து போகும் சொல் விளக்கம்: சீர்மை = ஒப்புரவு, குணம், அழகு, ஒப்புரவு = உலகநடை சிறப்பு - அருமை, அழகு, மேன்மை, செல்வம், இன்பம், மதிப்பு. சீர்மெய் - அழகு, சித்திரம், தலைமை வாழ்வு கொண்ட மெய். நீங்கும் = விலகும், ஒழியும், சிதறும், மாறும்.