பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: பயனிலவாகிய சொற்களை இனிய நீர்மை உடையார் சொல்லுவாராயின், அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். தற்கால உரை: பயனிலாச் சொற்களை உயர்ந்த பண்புடையவர் சொல்லுவார்களேயானால், அவர்களது பெருமையும் சிறப்பும், அவர்களை விட்டு விரைவில் நீங்கும். புதிய உரை: உலக வாழ்க்கை ஒழுக்கம் பற்றி நன்கு தெரிந்தவர்கள், எதற்கும் பயன்படாத வீணான சொற்களைப் பேசுகிறபோது, அவர்களது அழகு தேகம் குலைந்து, தலைமை நிலை தாழ்ந்து, மேன்மையெலாம் விலகி, சிதறுண்டு ஒழிந்து போகிறது. விளக்கம்: நான்காவது குறளில், பயனில சொற்களைப் பேசுகிற போது பேசுகிறவரின் நற்குணம் மாறிப் போகிறது என்றும், அதனால் அவர் வாழ்வுக்குரிய நன்மார்க்கமும் திசைமாறிப் போகிறது என்றும் குறித்திருந்தார். மனம் மாசுபடுகிறபோது, உடலும் மாசுக்குள்ளாகி விடுகிறது. மனம் போல வாழ்வு என்பதால், மனம் திரிபடைய, அதனால், அவரது அகத்தில், அல்லவைகள் ஆக்ரமித்துக் கொள்கின்றன. அகத்தை முகந்து காட்டுகின்ற முகமோ, அழகு குன்ற ஆரம்பிக்கிறது. அதைத்தான் சீர்மெய் (சீர்மை) என்றார். சித்திரம் போன்ற அழகான தேகம், பொலிவான முகம், கன்றிப்போய், களையிழந்து கவின் குன்றிப் போகிறது. தெரியாமல் செய்வது தவறு. அதாவது தவறுதலாக நடந்து விடுவது. ஆமாம், நெறிவழுவி விடுகிற செயல்பாடு. ஆனால் தெரிந்து செய்வதோ குற்றம். மாபெரும் பாவம். அதனால்தான் ஒப்புரவு என்கிற உலக நடைதெரிந்தவர்கள், உயர்ந்த ஒழுக்கம் பற்றிப் புரிந்தவர்கள், உறுத்துகின்ற மனத்தையும் மீறி, வருத்தமுண்டாக்கும் பயனிலவாகிய சொற்களைப் பேசுகிறபோது, அவரது குணம் கெட்டுப் போகிறது.