பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 27I குணம் கெட்ட பேர்களின் குலமும் கெட்டுப் போகிறது. புகழும் பட்டுப் போகிறது. பெருமை சேர்க்கும் அமைதியும் விட்டுப் போகிறது. இந்தக் குறிப்பைத்தான் 5 வது குறளில் தெரிவிக்கின்றார். நற்குணமும், நல்வாழ்வும் வீணான சொற்களால் விலகிப் போய், சிதறிப்போய், உருமாறிப்போய், ஒழிந்து போகிறது என்கிற முக்கிய விளைவுகளை வள்ளுவர் பட்டியலிட்டு காட்டுகிறார். 196. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல் பொருள் விளக்கம்: பயனில் சொல் = எதற்கும் பயன்படாத சொற்களையே பாராட்டுவானை - உரிமை என்று பாவித்து, பலகாலும் சொல்கிறவனை மகன் எனல் = மனிதகுல வழித்தோன்றல் என்பதை விட மக்கள் = மனிதர்களிலே பதடி எனல் = அற்பமானவன் (என்பதே பொருத்தமானதாகும்) சொல் விளக்கம்: பாராட் டு = உரிமை பாவித்து பலகாலும் சொல்லுதல் ஆடம்பரமாகக் கொண்டாடுதல் மகன் = மனிதகுல வழித் தோன்றல், செம்மல், தோற்றம், சந்ததி. பதடி = பயனின்மை, பதர்; பதர் = அற்பம் அறிவினன், உபயோக மற்றவன் முற்கால உரை: பயனில்லாத சொற்களைப் பலகாலும் சொல்லுவானை மகனென்று சொல்லற்க. மக்களுள் பதரென்று சொல்லுக. தற்கால உரை: பயனில்லாத சொற்களைப் பல படச் சொல் பவனை, அறிவறிந்த மகன் என்று சொல்லல் ஆகாது. அவனை மக்களுள் பதர் என்று சொல்லுக. புதிய உரை: iண்மொழிகள் பேசுவதையே தன் வாழ்க்கையின் உரிமை என்று பாவித்து பேசுகின்றவன், மனித குலத்தைச் சார்ந்தவன் அல்லன். அவன் அற்பமான கீழ் மகன் என்றே மதிக்கப் படுகிறான்.