பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


272 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: மனித உடல் எடுத்த எல்லோருமே மனிதர்கள் ஆவதில்லை. நல்ல சிந்தனையாலும், நல்ல சொற்களாலும், நல்ல பண்புகள் நிறைந்த செயல்களாலுமே, அவர்கள் மனிதர்களா, கினிதர்களா, புனிதர்களா என்று பிரிக்கப்படு கின்றார்கள். பண்புகளில் சிறந்தவரை மனிதன் என்றும்: பண்பில்லாது குறைந்தவரை கினிதன் (பீடைபிடித்தவன்) என்றும்; பண்புகளில் மிகுந்தவரை புனிதன் என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஆறாவது குறளில், மனிதர்க்கு வரப் பிரசாதமாக அமைந்து சொற்களே, மனிதர்களைத் தரம் பிரித்துக் காட்டவும் உதவுகின்றன. என்ற கருத்தையே, வள்ளுவர் மெலிதாகக் கோடிட்டுக் காட்டுகின்றார். பயனில்லாமல் பேசுவது தனது பிறப்புரிமை என்று, ஆடம்பரமாகக் கொண்டாடி, பலகாலும் பேசுகின்ற ஒருவன் இருந்தால், அவனை மனித வடிவாகப் பார்க்க வேண்டாம். மனிதகுலத் தோன்றல் என்று கூறவேண்டாம். மனித வம்சத்தின் சந்ததி என்று மதிக்க வேண்டாம். அவனை நீசன் என்றே நினைக்கலாம். அற்பன் என்று ஒதுக்கலாம். உபயோக மற்றவன், எதற்கும் இலாயக் கற்றவன் என்றே கூறலாம். இதை வலியுறுத்துகிற வண்ணம், இந்தக் குறளைப் படைத்திருக்கிறார். ஒருவன் பேசுகின்ற சொல் தான், அவனைப் பெரியவனாக உயர்த்துகிறது. அவனைச் சிறுவனாகவும் தாழ்த்துகிறது என்னும் சிந்தனையை, உலக நடையாகக் காட்டியிருக்கிறார். 197. நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. பொருள் விளக்கம்: நயனில சொல்லினும் = பிறருக்கு நன்மையும் உதவியும் செய்யத்தக்க அருள் பொதிந்த நீதியற்ற வார்த்தைகளைப் சொல்லுக = பேசினாலும் பரவாயில்லை சான்றோர் - அவ்வாறு கூறாத மக்களுக்குள் ஒன்றாக விளங்குகிற மேன்மையாளர் பயனில சொல்லாமை = அர்த்தமில்லாத பேச்சுக்களைப் பேசாமல் இருந்தால். நன்று - அதுவே அவருக்கு வாழ்வின் ஆக்கமாக அமையும்.