பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9అఉఅD புதிய உரை 273 சொல் விளக்கம்: நயன் - இன்பம், நன்மை, பலன், மகிழ்ச்சி, அருள், உறவு, நீதி. பயன் = பயம், அர்த்தம், பலன்; நன்று நன்மை, நல்வினை, பெருமை, உபகாரம், வாழ்வின் ஆக்கம். முற்கால உரை: நீதியோடு படாத சொற்களைச் சான்றோர் சொன்னாராயினும் அஃதமையும், அவர் பயனில வற்றைச் சொல்லாமை பெறின் அது நன்று. தற்கால உரை: சால் புடையவர், பிறர் விரும்பிக் கேட்க இயலாத சொற்களைச் சொல்வாராக. ஆனால், பயனில்லாத சொற்களைச் சொல்லாமையே நல்லது. புதிய உரை: பிறருக்கு நன்மையும் மகிழ்ச்சியும் தராத சொற்களைப் பேசினாலும் பரவாயில்லை. அதே சமயத்தில் பயனற்ற சொற்களால் பேசாமல் இருந்தால், அதுவே அவனுக்கு வாழ்வின் ஆக்கமாக அமையும். விளக்கம்: நயனில சொல்லுக என்கிறார் வள்ளுவர். மனிதனது கருத்துக்களை வெளிப்படுத்த மட்டும் உதவுவது சொற்கள் அல்ல. அவர் அவ்வாறு வெளிப்படுத்துகிற சொற்கள், கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். நன்மையைச் செய்யவேண்டும். அன்பை வெளிப்படுத்தி ஆறுதல் தரவேண்டும். மனித உறவை மேம்படுத்துகின்ற நேயத்தை உருவாக்க வேண்டும். நீதியையும் நியாயத்தையும் நிலைப் படுத்துவதாக அமையவேண்டும். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கேட்போருக்குக் கிடைப்பது போல, கிளர்ச்சியூட்டும் சொற்களைச் சொல்லா விட்டாலும் பரவாயில்லை. தான் பேசுகின்ற சொற்கள் தனக்கு உதவுவதாக அமைய வேண்டும். தன் வாழ்வின் ஆக்கத்தை அழிப்பதாக அமையக் கூடாது. வாழ்வின் பெருக்கத்தை, பெருமையை, பேரின்பத்தை, பிரகாசமான பிற்காலத்தை வேரோடு வீழ்த்துவதாக வெளிப்பட்டு விடக்கூடாது என்பதைத்தான், பயனில சொல்லாமை நன்று என்றார்.