பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


276 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா நயமான சொல்லில் தான் பிறக்கிறது என்று சொல்லின் உண்மையான பெருமையை, நுண்மையான திண்மையை எட்டாவது குறளில் சுட்டிக் காட்டுகிறார் வள்ளுவர். 199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி அவர் பொருள் விளக்கம்: பொருள் தீர்ந்த உடல் நலிவுற்றிருக்கும் போதும் மருள் தீர்ந்த - மனமாசுகளின் மயக்கத்திற்கு பொச்சாந்தும் = மற்றவர் மேல் பொல்லாங்கு வருவதுபோல மாசறு - குற்றம் சாராமல் நன்மை செய்யக்கூடிய காட்சியவர் = அறிவும் அழகும் கொண்டு தோன்றுபவர் சொல்லார் - பேசவே மாட்டார் சொல் விளக்கம்: பொருள் = பொன், உடல், உண்மை, குணம் பொச்சாத்து = பொல்லாங்கு, மறதி மருள் = உன்மத்தம், பைசாசம் காட்சி=அறிவும் அழகும் கொண்ட தோற்றம் முற்கால உரை: மயக்கத்தில் நீங்கிய அறிவினை உடையவர், பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார். தற்கால உரை: மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவுரை, பயனற்ற சொற்களை தம்மை மறந்தும் கூடச் சொல்ல மாட்டார். புதிய உரை: மன மாசுகளுக்கு ஆட்படாத, பழிபாவம் சாராத பயனுள்ள நன்மைகளைச் செய்யும் பண்புறு தோற்றம் உள்ளவர், தனது உடல் வலிமை தீர்ந்த நலிந்த நேரத்தும், பிறர்மேல் பொல்லாங்கை ஏற்படுத்தும் மொழிகளைப் பேசமாட்டார். விளக்கம்: பொருள் தீர்ந்த என்னும் பொருள் பொதிந்த சொல். பொருள் என்பதற்குப் பொன் என்றும். உடல் என்பதற்குப் பொருள், பொன் என்றும் அர்த்தங்கள் உண்டு.