பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 277 உடல் என்பதற்கு ஆசையால் வருந்து என்றும், மாறுபாடு என்றும் பொருள் உண்டு. ஆகவே, பொருள் தீர்ந்த என்பதற்கு நல்ல உடலில் உள்ள வலிமை தீர்ந்த என்று பொருள் கொள்ளலாம். உடல் நலிவுற்றவர்களுக்கு அடிக்கடி கோபமும், எதிர்பாராமல் எதிர்படுவோரிடமெல்லாம் எரிச்சல் படுவதும் இயற்கையே. அப்படி ஆத்திரப்படுகிற போது, அடுத்தவருக்குப் பொல் லாங்கும் தீமையும், வருத்தமும் உண்டாவதுபோல, பேசுவதும், எப்போதும் நிகழும் நிகழ்ச்சியே. மருள் தீர்ந்த என்பதற்கு மனதில் ஏற்படுகிற மாசுகளால் உண்டாகும் மயக்கத்திலிருந்து வெற்றி வெளிப்பட்டு விடுகிறவர், எப்போதும் பிறருக்கு நன்மையே செய்வார். தீங்கு செய்யார் என்ற உண்மை நிலையைக் குறிக்கவே, மருள் தீர்ந்த மாசறு என்ற சொற்களை, வள்ளுவர் வடித்திருக்கிறார். காட்சி என்கிற போது பல விதக் காட்சிகள் நிகழ்வதுண்டு. சந்தேகப்படுகிற ஐயக்காட்சி, நேரிலே தோன்றுகிற வாயில் காட்சி வேற்றுமையுடன் காணுகிற விகற்பக் காட்சி: சங்கிலித் தொடர் போல, விடாது தொடர்ந்து தோன்றுகிற அந்துவயக் காட்சி எதிர்மறையாகக் காணுகிற வெதிரேகக் காட்சி; ஒன்றை மற்றொன்றாகக் காணுகிற திரிவுக் காட்சி. இப்படிப்பட்ட காட்சிகளுக்கு அப்பால் நின்று, அறிவும் அழகும் மிளிரக் காட்சி தரும், ஐம்புலன் வென்றவர்கள், தங்களது உடல் நலிந்திருக்கும் காலத்தும் பொல்லாத மொழிகளைப் பேச மாட்டார்கள் என்று, உடலியல் கருத்தை உன்னதமாக ஒன்பதாம் குறளில் விளக்கியிருக்கிறார். 200. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனில்லாச் சொல். பொருள் விளக்கம்: சொல்லில் - (கட்டளை, புத்திமொழி, மந்திரமொழி, உறுதி மொழி, வாய்மை மொழி எனும்) பல்வேறு சொற்களில், பயனுடைய - வாழ்க்கைக்கு செழிப்புத் தரக் கூடியவைற்றை மட்டுமே சொல்லுக = உரைக்க வேண்டும்.