பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 25 7. தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. பொருள் விளக்கம்: தனக்கு உவமை இல்லாதான் = இணையாக எடுத்துக் கூறயாருமே இல்லை என்னும் நிலைக்கு உயர்ந்த ஞான குருவிற்கும் மேலான மோனகுருவின். தாள்சேர்ந்தார்க்கு = ஞானத்தை ஏற்றுப் பின்பற்றி ஒழுகி வாழ்பவர்க்கு அல்லால் = மயக்கத்தையும், நச்சுத் தன்மையும் ஆன மனக்கவலை = மனத் துன்ப நோயை மாற்றல் = தீர்த்து விடுவது அரிது - சிறப்பான செயலாகும். சொல் விளக்கம்: உவமை இல்லாதான் = ஞானகுருவிற்கு மேலான மோன குரு தாள் சேர்ந்தார் = ஞானத்தை ஏற்றார்; அல்லால் = மயக்கம் நச்சுத்தன்மை; அரிது = சிறப்பான செயல் முற்கால உரை: ஒருவாற்றானும் தனக்கு நிகரில்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கல்லது மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உணடாகாது. தற்கால உரை: இவனுக்கு இவனே உவமை எனத்தக்க இயல்புடையவனின் வழியைப் பின்பற்றாதவர், தமக்கு உண்டாகும் மனக்கவலையை மாற்றிக்கொள்ள முடியாது. புதிய உரை: இணையாக எடுத்துக் கூற யாருமே இல்லை என்னும் நிலைக்கு உயர்ந்த ஞான குருவிற்கு மேலான மோன குருவின் ஞானத்தை ஏற்றுப் பின்பற்றி ஒழுகிவாழ்பவருக்கு, மயக்கமும் நச்சுத்தன்மையும் ஆன மனநோயைத் தீர்த்து விடுவது சிறப்பான செயலாகும். விளக்கம்: சேர்ந்தார் என்பது சேர்ந்து விடுதல். ஒத்துப் போவதை ஒர்ந்து விடுதல் என்றும், ஒட்டிப் போவதை சார்ந்து விடுதல் என்றும் ஒன்றிப் போவதைச் சேர்த்து விடுதல் என்றும் கூறலாம்.