பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 279 பேச்சானது கேட்பரின் மனத்தைப் பாதிக்கிறது. நினைவுகளில் வேரூன்றுகிறது. செயல்படத் தூண்டுகிறது. சிந்திப்பதில் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. வாழ்வுக்கு வளமான பாதையைச் சீரமைத்துக் கொடுக்கிறது. இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு, இதமாகவும், இனிமையாகவும், பதமாகவும் பண்போடும் பேசுகிற சொற்களே பயனுள்ள சொற்கள். அப்படிப் பேசுகின்றவரைத் தான் வள்ளுவர் சான்றோர் என்றார். மருள் தீர்ந்த மாசறு காட்சியாளர் என்றார். ஆயும் அறிவினார் என்றார். நேர்மையாளர் என்றார். உலக மக்கள் எல்லோரும் இத்தகைய பண்பாளர்களாக உருவாக வேண்டும் என்னும் உயர்ந்த இலட்சியக் கனவுடன் தான், பயனில சொல்லாமை என்னும் அதிகாரத்தைப் படைத்துத் தந்திருகிறார் வள்ளுவப் பெருமான் அவர்கள்.