பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 283 o சூழ்ச்சியும் வஞ்சனையும் பிறரை வீழ்த்தவும், வெறுமையாக்கவுமே முற்படுவதால், கண்டதையும் எரிக்கிற தீயைப்போல, மனிதாபிமானமற்ற முண்டர்களாகவும் (முரண்டு செய்பவர்கள்) கேடு பயக்கும் குண்டர்களாகவும் (இழிந்தவர்கள்) ஆகிவிடுகிறார்கள். அறிவு சிதைந்து போவதால், பெருந்தன்மையின் மென்மையும் மறைந்து போக அவர்கள் மனத்திலே செருக்குப் படம் விரித்தாடுகிறது. அந்த ஆணவச் செருக்கோ, இணையாரும் இல்லை எனும் இறுமாப்பைப் பெற்றுத்தர, அதனால், அகக் களிப்பு ஆரவாரித்துக் கிளம்புகிறது. அவரது மனம் முழுவதும், அகங்காரம் ஆட்சி செய்கிற தலமாகவே ஆகி விடுவதால், மேலும் மேலும் தீவினைகள் மேலே தீவிரப்பற்றும் கிளைத்தெழத் தொடங்கிவிடுகிறது. அதனால்தான், வள்ளுவப் பெருந்தகை, வினையார் என்று பொருத்தமான சொல்லை இங்கே வைத்திருக்கிறார். வினையாரும் தீவினை செய்தபடி வெற்றிபெற முடியாது. அவர்கள் சிக்கிக் கொண்டு, சிக்கலில் தவித்து, துன்பம் அடைகிற போது, அவற்றைச் சிந்தித்துப் பார்க்கும் வினையார் விழுமியோராக மாறிவிடுகிறார். விழுமம் என்பது துன்பம். விழுமம் அடைந்தவர் மீண்டும் அந்தத் தீவினைக்குள் ஆட்படுவதற்கு அஞ்சி ஒதுங்குவார். பெரியோர்களோ தீவினையின் கொடுமையை உணர்ந்து கொண்டு, அவற்றைச் செய்ய அஞ்சி ஒதுங்குவார்கள். பட்டுத் தெளிகிற சாதாரண மனிதர்கள் படாமல் தெளிவு கொள்கிற பண்பாளர்கள், என மனித மனங்களையும், இனங்களின் இயல்புகளையும் முதல் குறளில், மிக நுண்மையாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். 202. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் பொருள் விளக்கம்: தீய வை = தீங்குகள் செய்கிற கீழோரின் உலகம் தீய பயத்தலால் = கேடுகளையே உண்டாக்கி விடுவதால். தீ அவை - அந்தக் கீழோர்கள் கூறியுள்ள (சபை) கூட்டமானது தீயினும் தீயைக் காட்டிலும். அஞ்சப்படும் - அச்ச மூட்டுகிற அனல் களமாகிவிடும்.