பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/288

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 287 அப்படிப் பட்ட தெளிவின் தெளிவுதான் ஞானம் ஆகிறது. அந்த ஞானமே மோனமாகவும் மாறுகிறது. ஆகவே, அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலையாயது அதாவது மகுடமாகவும், சிகரமாகவும் விளங்குவது, குற்றவாளியைத் திருத்துகிற ஞானம். திருந்தச் செய்கிற வல்லமை மிகுந்த ஞானம் செறுவாரை, சீரழிந்த தீயோரை, செம்மைப்படுத்த, உண்மையாக உழைக்க வேண்டும் என்று நல்லோருக்கும், வல்லோருக்கும் உள்ளன்போடு, உயர் நெறி ஒன்றை, இந்த மூன்றாம் குறளில் கற்பித்திருக்கிறார். 204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. பொருள் விளக்கம்: மறந்தும் - பிணக்கு, பகை, அல்லது எழுச்சி, மற்றும் அசட்டைத் தனத்தால் பிறன் - மனம் வேறுபட்டவர்கள் அல்லது பகைவர்களுக்கு கேடு சூழற்க அழிவையும் இழிவையும் தருகிற கெடுதிகளை செய்யற்க. - சூழின் - அப்படிப் பிறருக்கு கேடுபயப்பது போல, சுற்றிவளைத்து செயல்பட்டால். அறம் - அவரது ஒழுக்கம், ஞானம் போன்றவையோடு சூழ்ந்தவன் - அவனைச் சூழ்ந்த உறவோருக்கும் கேடு சூழும் = சிதைவும் சேதம் போன்ற பொல்லாங்குகள் கூடும் சொல் விளக்கம்: சூழல் = பாவம், கொடுமை, அழிவு செய்ய ஒருவரைச் சுற்றி வளைத்தல் கேடு - இழிவு, அழிவு, சிதைவு, சேதம், துரோகம் அறம் = ஒழுக்கம், ஞானம், போன்றவையோடு சூழ்ந்தவன் - அவனைச் சூழ்ந்த உறவோருக்கும் கேடுகுழும் = சிதைவும் சேதம் போன்ற பொல்லாங்குகள் கூடும் முற்கால உரை: ஒருவன் பிறருக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணா தொழிக. எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.