பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 289 பிறனுக்குக் கேடு என்றால் உனக்கு மட்டுமல்ல, உன்னைச் சார்ந்தவர்களுக்குப் பின் விளைவுகளாகத் தீங்குகள் தொடரும் என்று, 4வது குறளில் வள்ளுவர் எச்சரித்திருக்கிறார். 205. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. பொருள் விளக்கம்: இலன் என்று = வேறு பக்கத்துணை, பின்புலம் இல்லையென்று தீயவை செய்யற்க - ஒருவருக்குத் தீங்குகளைச் செய்ய வேண்டாம். செய்யின் = அவ்வாறு ஆணவத்துடன் தீங்கிழைத்தால் இலனாகும் - அவரைப்போன்றே, செய்பவருக்கும் இல்லையென்ற இழி நிலைக்கு ஆளாக நேரிடும். மற்றும் மேலும் பெயர்த்து = அவரது நிலைபோலவே திரும்பவும் மோசமான விளைவுகள் ஏற்படவும் கூடும். சொல் விளக்கம்: மற்று = பிறவும், மற்றொன்று பெயர்த்து = வேறுபடுத்துதல், திருப்புதல், கிளம்புதல் முற்கால உரை: யான் வறியவன் என்று கருதி, அது தீர்தற் பொருட்டு, பிறருக்குத் தீவினைகளை ஒருவன் செய்யா தொழிக. செய்வானாயின் பெயர்த்தும் வறியனாம். தற்கால உரை: யான் வறியவன் என்று கருதி, அதனை நீக்குதற்காகத் தீச்செயல்களைச் செய்யா திருப்பானாக. அவன் செய்யின், உள்ளதையும் இழந்து மேலும் வறியவன் ஆவான். புதிய உரை: ஒருவனுக்கு எந்த ஆதரவும் துணையும் இல்லை என்று நினைத்து, கேடுகள் இழைக்கக் கூடாது. அப்படி தீச் செயல்களைச் செய்தால், தானும் பக்கதுணையை இழந்து படுவதோடு, இலனாகி, மேலும் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.