பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 29 | 206. தீப்பால தான்பிறன்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான் பொருள் விளக்கம்: நோய்ப்பால - தீராத நோய்கள் பல தன்னை அடல் வேண்டாதான் = தன்னை ஆட்படுத்தி வெற்றி கொண்டு கொல்லப்படுவதை விரும்பாத ஒருவன் தீப்பால - தீமையின் மேல் பற்று கொண்டு. பிறன்கண் = மற்றவரது உடம்புக்கு தான் செய்யற்க - எந்த விதமான கெடுதலையும் செய்யவே கூடாது. சொல் விளக்கம்: பாலது = பற்று, பகுதி; கண் = உடம்பு, சரீரம் நோய் - துன்பம், வியாதி, குற்றம், தீராத நோய் ( எவ்வம்) அடல் = சொல்லுதல், வெற்றி முற்கால உரை: துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன்; தீமைக் கூற்றவாகிய வினைகளைத்தான் பிறர் மாட்டுச் செய்யாதொழிக. தற்கால உரை: துன்புறுத்தக் கூடிய குற்றங்கள் எல்லாம் தன்னை அழித்தலை விரும்பாதவன். பிறருக்குத் தீமையுண்ட ாக்கும் பழிச் செயல்களைச் செய்யா திருப்பானாக. புதிய உரை: தீராத நோய்கள் பல தோன்றி, தன்னைக் கொல்லக்கூடாது என்று விரும்புகிறவன், பிறரது உடலுக்குக் கெடுதலை உண்டாக்கிய தீய குற்றங்களையெல்லாம் செய்யவே கூடாது. விளக்கம்: தீப் பால எனும் சொல்லுக்குப் பரிமேலழகர் பாவங்கள் என்றார். தற்கால உரையாசிரியர்கள் பலரும் குற்றம் என்றனர். தீய செயல்கள் மீது பற்று கொண்டு, விரும்பி, வேட்கையின் காரணமாக விகாரப்பட்டுப்போன மனதுடன், செய்கிற செயல்கள் என்னும் கருத்தை இங்கே நான் எழுதியுள்ளேன். வெறுப்பின் உச்சக் கட்ட வெறியானது, பிறரைப்பழி வாங்கத் துடிக்கும். பகைப் பட்டவரின் மனத்தைத் துன்புறுத்துவதைவிட, பிறரது உடலுக்கு ஊறு நிகழ்த்து வதையே,