பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


292 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பேராண்மை என்று கருதி, பழிகளைச் செய்கிறார்கள் இழி மனத்தவர்கள். இப் படிப்பட்ட மனித மனத்தின் புன் மதியைத் தெரிந்த வள்ளுவர், பிறன்கண் என்றார். பிறன் என்றால், மாற்றான் என்றும், மனம் வேறுபட்டதால் பகைவன் ஆனவன் என்றும், கண் என்றால் உடம்பு, சரீரம் என்றும் அர்த்தங்கள் உண்டு. ஆகவே, பகையாளனது உடம்புக்கு எந்தவிதமான தீங்கையும், பொல்லாங்கையும் செய்யவேண்டாம். அப்படிச் செய்தால், நோய் ப் பால என்ற சொல்லில், அதற்குரிய தண்டனையை வள்ளுவர் குறித்துக் காட்டுகின்றார். நோயின் கடுமையான நிலையை எவ் வம் என்ற சொல் குறிக்கிறது. எவ்வம் என்றால் தீராத நோய. வந்த பின் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு, உடலை வதைத்து, மனத்தைச் சிதைத்து, ஆத்மாவை அழித்து விடுகிற நோய். அப்படிப்பட்ட நோய்க்கு ஆளாகிப் போவீர்கள். அதனால் தான் பிறர் கண் நோக, துன்பம் இழைக்காமல், கண்ணும் கருத்துமாக, என்றும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். தீவினை செயல்களின் தன்மையையும், அவைகள் எவ்வாறு பிரதிபலித்து கொடுமைகளைக் கொடுக்கிறது என்ற உண்மையையும் இந்த ஆறாவது குறளில் அற்புதமாக விளக்கிக் காட்டுகிறார். நலமாகத்தான் வாழ விரும்புகிற எவரும், பிறரையும் நலமாக வாழ விட வேண்டும். நல்லவைகளையே சூழ விடவேண்டும் என்னும் வாழ்வின் மேலாண்மைத் தத்துவத்தை விளக்குகிற குறளாக இது அமைந்திருக்கிறது. 207. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின் சென்று அடும். பொருள் விளக்கம்: எனைப்பகை - எவ்வளவு பெரிய பகை கொண்டிருந்தாலும் உற்றாரும் = பகைக்கு ஆளானவரும், அவர்தம் உறவோரும் உய்வர் - தப்பித்துப் பிழைப்பர். வினைப்பகை பொல்லாங்கு செய்ததால் வந்த பகையானது