பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 29.3 iயாது = அழிந்து போகாது (விட்டு விடாது) பின்சென்று = பிற்காலத்திலும் தொடர்ந்து சென்று அடும் = வருத்தி, வதைத்து அழித்து விடும் சொல் விளக்கம்: எவ்வளவு உற்றார் = சுற்றத்தார், நண்பர், உறவோர் உய்வர் தப்பிப்பர், ஈடேறுவர்; பின் பிற்காலம் அடும் = வருத்தம், அழிக்கும், கொல்லும். முற்கால உரை: எத்துணைப் பெரிய பகையுடையாரும், அதனை ஒருவாற்றால் தப்புவர். அவ்வாறின்றித் தீவினையாகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும். தற்கால உரை: எத்தகைய பகையை அடைந்தவரும் தப் புவர். தீய வினையாகிய பகை நீங்காது, அவனைப் பின்னே சென்று வருத்தும். புதிய உரை: எவ்வளவு பெரிய பகையிலும், அவனும் அவனைச் சார்ந்த சுற்றத்தாரும் தப்பித்துப் பிழைப்பார். ஆனால், தீவினை செய்ததால் வந்த பகையானது, அழிந்து போகாமல், எந்தக் காலத்திலும் அவனைப் பின்தொடர்ந்து வருத்திக் கொல்லும், விளக்கம்: மிகப்பெரிய பகை என்று மூன்றைக் கூறுவர். அந்த முப்பகை என்பது - தீய ஆவியாகிய பிசாசு, உலகம், உடல் (தசைகள்). உடலுக்குள்ளே ஆட்சி செய்கிற மனத்துக்குள்ள பகைகள் ஆறு. அவை காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம். இவைபோல எத்தனைப் பகைக்குள் சிக்கிக் கொண்டாலும் சிக்கியவர் தப்பிப்பர். சிக்கியவரின் உறவும் நட்பும் தப்பித்தல் பிழைக்கும். இதைக் குறிக்கவே உற்றாரும் உய்வர் என்கிறார். நான்காவது குறளில் (204), சூழ்ந்த சுற்றமானது. தீவினையாளருடன் கெடும் என்று குறித்தவர், இந்தக் குறளில், வேறுபல பகைகளைக் காட்டி, அதனால் உரியவன் பாதிக்கப்படலாம். படாமலும் இருக்கலாம். ஆனால், வேறு பகைக்காக உறவுகள் ஒழியாது, தப்பித்து வாழ்வர்.