பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தீவினைக் கொடுமை நீங்கவில்லை. அது தாக்குகிறது. தாக்குதலின் உச்சக் கட்டம் இறுக்கி விடுவது, கடைசிக் கட்டம்-இல்லாமல் செய்து விடுவது. இப்படித்தான் தீவினைகள், செய்த மனிதருக்கு எதிராக எழும்பி, நீதியை நிலை நிறுத்த, அவரைக் கடுமையாகத் தாக்கி, உடலையும் மனத்தையும் நிலைமாறச் செய்து, நிம்மதியை அழித்து, இறுதியில் கழித்து இல்லாமல் ஆக்கி விடுகிறது. இந்த அற்புதமான தண்டனையைத் தமது 8 வது குறளில் வள்ளுவர் நயத்தோடு விளக்கி இருக்கிறார். 209. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் பொருள் விளக்கம்: தன்னை காதலன் - தன்னைத் தலைவனாக (ஒருவன்) ஆயின்தான் = உயர்த்திக் கொள்ள, (வேண்டும் என்பதை) தான் ஆராய்ந்து பார்த்தால் எனைத்தொன்றும் = எந்தவிதமான தீவினைப்பால் = தீய செயல்களின் பக்கம் துன்னற்க - நெருங்க விடவே கூடாது. சொல் விளக்கம்: காதலன் - தலைவன், அன்பன், சிநேகன், தோழன் ஆயின் - ஆராய்ந்து பார்த்தால், துன்னற்க - நெருங்க விடாமல் முற்கால உரை: தன்னைத்தான் காதல் செய்தலுடையனாயின் தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறியதொன்றாயினும், பிறர் மாட்டு செய்யாதொழிக. தற்கால உரை: தன்னைத்தான் காதலிப்பவனாயின் தீவினைப் பகுதிகளில், எவ்வளவு சிறியதான ஒன்றையும் நெருங்காதிருக்கக் கடவன். புதிய உரை: தன்னைத் தலைவனாக, தானே உயர்த்திக் கொள்ள விரும்புகிற ஒருவன், தீமை பயக்கும் தீச் செயல்கள் தன்னை நெருங்கவிடாமல் (விழிப்போடு) இருக்க வேண்டும்.