பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வல்லமை கொண்டவனே வாழ்வில் தலைமையாளராக வாழ முடியும். தீவினையை நெருங்க விடாதவன், பிறர்க்குத் தீவினை செய்ய மாட்டான் என்ற நிதர்சன உண்மையை வள்ளுவர் 9 வது குறளில் விளக்கியிருக்கிறார். 210. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் பொருள் விளக்கம்: மருங்கோடி-மனத்தாலும், மனம் வேறுபட்டவன் பக்கம் சென்று தீவினை செய்யான் = தீவினைகளைச் செய்யாத செம்மை யுடையவன்; எனின் = என்றால் அருங்கேடன் - என்றும் அழிவில்லாதவன் என்பது அறிக = என்று நாம் நிச்சயமாக உணரலாம். சொல் விளக்கம்: மருங்கு = ஒழுங்கு, பக்கம் அருங்கேடன் = அழிவில்லாதவன், கேடில்லாதவன் கேடன் = அழிப்பவன் முறகால உரை: ஒருவன் செந்நெறிக்கண் செல்லாது கொடு நெறிக்கண் சென்று பிறர் மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின் அவன் அரிதாகிய கேட்டையுடையன் என்பதறிக. தற்கால உரை: ஒருவன் அறநெறியை விட்டுப் பக்கத்தில் ஒடி, தீயவினைகளைச் செய்வான் என்றால், அவன் நீக்குதற்குரிய கேட்டை உடையவன் என்று அறிக. புதிய உரை: மனத்தாலும் மற்றவர்களுக்குத் தீவினை செய்யாத ஒருவன் வாழ்வில் அழியாதவன் என்றும் நிலைத்திருப்பான் என்பதை நாம் நிச்சயமாக உணரலாம். விளக்கம்: தீவினை என்பது வஞ்சனையால் விளைகிற தீச் செயல்கள். வஞ்சனை என்பது மனத்தின் வக்கிரம், நினைவின் நஞ்சு, எண்ண வெளிப்பாட்டின் ஈனம்.