பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 27 நீந்தல் = வென்று கடத்தல் என்பது அரிது - சிறப்பாக முடியும் செயலாகும். சொல் விளக்கம்: அற = தெளிவு, ஒவ்வாமை, தகுதி, ஞானம், தவம், ஒழுக்கம். ஆழி = கட்டளை இடுகிற: == தாள் = ஞானம் நிரம்பப் பெற்ற அவரது பெருமை: அரிது - சிறப்பாக முடியும் செயல். முற்கால உரை: அறக்கடலாகிய அந்தணனது தாளாகிய புணையைச் சேர்ந்தார்க்கு அல்லது, அதனிற் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. தற்கால உரை: அறக்கடலாக விளங்கும், செந்தண்மையை உடைய, அறிவாற்றலில் சிறந்த சான்றோரைப் பின்பற்றி அவரோடு பொருந்தி நிற்பவர்களுக்கு மட்டுமே அல்லாமல், மற்றவர்களுக்கு எல்லாம், மற்ற துன்பக் கடல்களை நீந்திக் கரை சேர்வது என்பது அரிதான ஒரு செயலாகும். புதிய உரை: தெளிவுடனும், ஒவ்வாமையுடனும் முற்ற முழுவதுமாகத் தகுதி, ஞானம், தவம், ஒழுக்கம் அனைத்துக்கும், கட்டளை இடுகிற வல்லமைபெற்ற கருணையாளனாகிய குருவின் ஞானத்தை நிரம்பப் பெற்ற அவரது பெருமை வழியைப் பின்பற்றுவோர்க்கு , மயக்கம் , அச்சம், அதிசயம், நச்சுத்தன்மை உடைய துன்பக்கடலை வென்று கடத்தல் சிறப்பான செயலாகும். விளக்கம்: அற என்பதை அற்றுப் போக என்றும் கூறலாம். தகுதி, ஞானம், தவம் ஒழுக்கத்தைக் குறிக்கும். அற என்பதற்கு உடலைக் கெடுக்கின்ற தீய செயல்களை மனத்தை மயக்கும் மாய் மாலக் காரியங்களை எல்லாம் எனவும் கூறலாம். உடலைக் காக்கும் உன்னத நெறியாளன் அறிவாளன். சான்றாளன், செந்தண்மையாளன் என்று வியப்புறச் சொல்கிறார். 7 வது குறளில் உள்ள அல்லால் என்ற சொல்லின் தன்மையை இந்தக் குறளுக்கும் பொருந்துகிறது. பிற ஆழி என்பது பெருகிவரும் சுற்றுப்புறக் கொடுமைகள் உடலின் உட்புற வேதனைகள் சோதனைகள் எல்லாம் ஆழியாக வந்து அல்லல் படுத்துமே!