பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


H ள் திருக்குறள் புதிய உரை 299 உடலால் ஒருவனுக்குத் தீங்கிழைப்பது இயற்கையானதே. ஒருவனுக்கு ஏற்பட்ட பகையும் வன்மம், நெஞ்சுக்குள்ளே புகைந்து, தணலாக எரிந்து தகிக்கிறபோது தான், தான்தோன்றித்தனமான தவறுகள் தலைதூக்கி எழுகின்றன. ஆகவே வள்ளுவர் இங்கே புதிய வழி ஒன்றைப் படைத்துக் காட்டுகிறார். நெருங்கிச் சென்று, தீவினை செய்யான் எனின் என்று புதிய வியூகம் படைக்கிறார். மனத்தால் பகைவனிடம் நெருங்கி ஓடி, தீவினை செய்வதும் கூட பாவம் தான். பாழாக்குகிற தீமைதான் என்பதை வள்ளுவர் பக்குவமாக எடுத்துக் காட்டுகிறார். ஆகவேதான், மனத்தால் கூட பகைவனை நெருங்காதவன் எப்படித் தீவினை செய்வான்? அப்படி நினைவால்கூட தீவினை செய்யாதவன் எப்படி இருப்பான்? தீவினை செய்பவன் கேடன். அதாவது கேடுகளைப் பயப்பவன். ஆனால் வள்ளுவர் கூறுகிற சொல் அருங்கேடன். அருங்கேடன் என்றால் அருமையான கேடன் என்பதல்ல அழிவில்லாதவன், கேடில்லாதவன் என்பதுதான் அர்த்தம். மன்றதால் கூட, சிறிதளவு தீமை செய்யாதவனை, மனிதர்கள் மத்தியிலே, அழிவில்லாத மனிதனாகப் புகழ் பெற்று, நிலை பெற்று விடுகிறான். அதனால்தான் தீவினை செய்யான் எனின் என்றார். உடலால் செய்வது மிக எளிது. மனத்தால் செய்வது மிகவும் எளிது. ஆனால், மனத்தாலும் தீங்கு நினையாதிருப்பது அரியகாரியம் ஆகும். 9 வது குறளில் தீவினைகளை நெருங்கவிடாத திண்மை வேண்டும் என்றார். பத்தாவது குறளில், தீவினைகளை நெருங்கவிடாமல் இருப்பதை, அவற்றை நினையாதிருப்பதே பெரும் வலிமை என்று, மருங்கோடி என்று கூறி, அருங்கேடன் என்பதாக, நமக்கு அறிமுகப்படுத்தி, மனித ஆற்றலால் தீவினையை வென்றுகாட்ட முடியும் என்னும் நம்பிக்கையை நிறைத்திருக்கிறார்.