பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/301

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3OO டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 22. ஒப்புரவறிதல் வேறுபட்ட மனம், மாறுபட்ட செய்கை, கூறுபட்ட குறுக்கீடு, கோபப்பட்ட செயல்கள். இப்படித்தான் தீவினைகள் மக்கள் மனத்திலே இடம் பிடித்து, பதம் அழித்து, வதப்படுத்தி விடுகின்றன. தீவினை என்பது அடுப்பு போன்றது என்பதைக் குறிக்கவே தீவினை அச்சம் என்ற அதிகாரத்தைப் பாடி, அதற்கு அடுத்ததாக ஒப்புரவறிதல் என்று தந்திருக்கிறார். ஒப்புரவறிதல் என்றால் உலக நடைக்கேற்றவாறு பிறருக்கு உபகாரம் செய்தல் என்று ஆய்வறிஞர்கள் பொருள் கூறுகின்றார்கள். உலக நடை என்றால், உலக வழக்கமும், உலக ஒழுக்கமும் என்று அர்த்தமாகிறது. அதைச் சிறப்பாக, உலகியல் என்றும் பெருமைபடக் கூறுவார்கள். உலகியல் என்றால் உலக நீதி. உலக நீதி என்றால் இயல்பான நீதி. இயல்பு என்றால் ஒழுக்கம், நற்குணம், நேர்மை. ஆகவே, உலக நீதி என்பதற்குச் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டு, சகலராலும் சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சம்பிரதாய மாகப் பின்பற்றக் கூடிய செயல் பாடுகளும், கடமைகளும், நிர்ப்பந்தங்களும் தாம் என்றும் விளக்கம் கூறலாம். ஒ புரவு என்று ஒப்புரவு என்ற சொல்லை இரண்டாகப் பிரிக்கிறோம். ஒ என்றால் நிகர், சமம், தகுதி, பொருந்த என்றும், புரவு என்றால் கொடை என்றும் பொருள் வருகிறது. இயற்கையானது சமுதாயத்திற்கு வழங்கிய நல்ல கொடையே ஒப்புரவாகிறது. காட்டிலே மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்த மனிதர்களுக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், ஒற்றுமையாக வாழ ஊக்குவித்தன. எல்லோரும் போர்ப்படை வீரர்கள் போல இருந்து, ஒருவருக்கொருவர் உதவி, உற்றார் உறவினர்களாக வாழவேண்டும் என்று உறுதி எடுத்தனர்.