பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/303

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


302 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - -*. 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு. பொருள் விளக்கம்: கைம்மாறு வேண்டா = ஒழுக்கமோ பகையோ என்று எதுவும் எதிர்பார்க்காமல் கடப்பாடு = தன் தலையாய கடமையென்று மாரிமாட்டு = பொழிகிற மழை பற்றி உலகு என்னாற்றும் = உலகம் என்ன செய்கிறது? கொல்லோ= வீண் வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டிருக்கிறது. சொல் விளக்கம்: கை= ஒழுக்கம்; மாறு = பகை, கடப்பாடு = கடமை கொல் = அலட்டு, வீண் வார்த்தைகளை மென் மேலும் கூறுதல் மாரி = மேகம், அழிவு, நீர், சாவு, மழை முற்கால உரை: தமக்கு நீருதவுகின்ற மேகங்களிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? ஆதலால் மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும். கைம்மாறு நோக்குவன அல்ல. தற்கால உரை: - ஒப்புரவுகள் கைம்மாற்றை விரும்பா மழைக்கு உலகம் யாது கைம்மாற்றினைச் செய்யும்? புதிய உரை: எல்லாவற்றையும் சமமாக மதித்து, பெய்து உதவுகிற மழைபற்றி உலகினர் என்ன செய்கிறார்கள்? வீண் வார்த்தைகளைப் பேசித்தான் வரவேற்கின்றார்கள். அதற்காக மழையும் தன் கடமையை நிறுத்துவதில்லை. விளக்கம்: இயல் + கை தான் இயற்கை ஆகிறது. இயல் என்றாலும் ஒழுக்கம். கை என்றாலும் ஒழுக்கம். ஒழுக்கத்தைக் காக்கும் உன்னத இயக்கங்களே பஞ்ச பூதங்களாகும். பஞ்ச பூதங்களின் பாங்கும், பண்பாடும், தங்களது கடமைகளை விடாது தொடர்வதுதான். ஏற்றுக் கொள்பவர்கள் போற்றுகின்றார்களா? தூற்றுகின்றார்களா? வரவேற் கின்றார்களா?