பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை - _303 வசைபாடுகின்றார்களா என்றெல்லாம் இயற்கை பார்ப்பதில்லை. தொடர்ந்து தன் தொழிலைச் செய்கின்றன. மனிதர்கள் செய்வதைச் (செயல் + கை), செயற்கை என்பார்கள். செயல் ஒழுக்கம் செம்மையாக இருக்க வேண்டும் என்பதால்தான் செயற்கை என்றனர். மாரி மாட்டு என்று வள்ளுவர் இங்கே குறிப்பிடுகின்றார். மாரி என்றால் மழை, மழை என்றும் மேகம் என்றும் கூறலாம். மழையைப் பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள்? மழை பெய்தும் கெடுக்கும். காய்ந்தும் கெடுக்கும். மழையைப்பற்றி வீண்வார்த்தை பேசுவார்கள் என்பதால் தான், மாரி என்ற சொல்லுக்கு நீர் என்றும், நோய் என்றும், சாவு என்றும் அர்த்தங்களை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். மழையைப் பற்றிப் பேசினாலும் ஏசினாலும், மழை தன் தொழிலை விடுவதில்லை. அதுபோலவே, மனத்தால் உயர்ந்தவர்கள். மற்றவர்கள் தங்கள் உதவியை எதிர்பார்க்கிறார்களா இல்லையா என்பதைப்பற்றி, கவலையே படாமல், தங்கள் கடமைகளைச் செய்து விடுகின்றனர். மாரியின் உதவிக்கு மக்கள் எதை ஈடாகச் செய்ய முடியும்? என்ன சொல்லிப் போற்ற முடியும்? வருவதை நல்ல மனத்துடன் வரவேற்கும் பக்குவம் மக்களுக்கு இல்லை. இலவசமாக வரும் எந்தப் பொருளையும் இதய பூர்வமாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்தக் குணங்களைக் கொண்டிருக்கிற மக்களுடன் வாழ்கிற, பண்பாளர்கள், இயற்கை போல இருக்க வேண்டும். உதவ வேண்டும். எல்லோரையும் சமமாகப் பாவிக்க வேண்டும். சேவிக்க வேண்டும் என்று முதல் குறளில் ஏற்பவரைப் பற்றி எண்ணாமல், எந்த உதவிகளையும் செய்க என்று மக்களை வள்ளுவர் ஆற்றுப்படுத்துகிறார். 212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள் விளக்கம்: தாளாற்றித் தந்து = முயற்சி செய்து வளர்த்து வலிமையுடைய பொருள் எல்லாம் - உடல் முழுவதும் தக்கார்க்கு = தகுதி உடைய நன்மக்களுக்கு