பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வேளாண்மை = உதவி செய்கிற செய்தற் பொருட்டு = பேராண்மையை மேம்படுத்தும் பொருட்டேயாம் சொல் விளக்கம்:தாளாற்றி = முயற்சித்து; ஆற்றுதல் = வலிமை அடைதல் பொருள் = பொன், உடல்; தக்கார் = தகுதி உடையவர், சிறந்தோர் வேளாண்மை = கொடை, ஈகை, உதவி செய்தல் = அரியசெயல், பேராண்மை பொருட்டு = மேம்படுத்த, நிமித்தம். முற்கால உரை: தகுதியுடையார்க்காயின் முயறலைச் செய்தீட்டிய பொருள் முழுவதும், ஒப்புரவு செய்தற் பயத்தவாம். தற்கால உரை: முயற்சி செய்து தந்த பொருளெல்லாம், தகுதி உடையார்க்கு உதவி செய்தற் பொருட்டேயாகும். புதிய உரை: மிகுந்த முயற்சியுடன் வளர்த்துக் கொண்ட வலிமையான உடலால், உதவி வேண்டிய தகுதியுள்ளவர்களுக்கு உதவுவதே மேம்பாடுமிக்க பேராண்மையாகும். -- விளக்கம்: உடலுக்குப் பொருள் என்றும் பொன் என்றும் அர்த்தங்கள் உண்டு. உழைத்து, வருத்தி, திருத்தி செய்கிறபோதுதான், பொருளாகிய முதல், பல்கிப் பெருகி, வளம் சேர்க்கின்றது. தீயில் வெந்தும், உருகியும், அடிபட்டும் பொடிபட்டும் கிடக்கின்ற பொன்தான், பிறர் வியக்கும் வகையிலும், மயக்கும் அழகிலும் ஆபரணங்களாகி வெளி வருகின்றன. ஆகவே, உடலுக்கும், பொருளுக்கும், பொன்னுக்கும் உள்ள ஒற்றுமையான குணமானது, தேவைப் படு கிறவர்களுக்கும், விரும்பி ஏற்றுக் கொள்கின்றவர்களுக்கும் உதவி, மகிழ்ச்சியை வழங்குவதேயாகும். அதனால்தான், தாளாற்றித் தந்த பொருள் என்றார். பொருளில் லார்க்கு - அதாவது நல்ல உடல் வளம்