பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 품 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS o - - அந்த அச்சம் தரத்தக்க ஆழ்கடலான ஆழிகளை, நீந்தல், துடைத்தல், வெல்லுதல் எளிது. சிறப்புறச் செய்தல் வல்லது. 7வது குறளில் துன்ப நோய்களைத் தீர்க்க முடியும் என்றும் 8வது குறளில் துன்ப நோய்களின் தொடர்ச்சியைக் கூறி ஆழியாக அலைபாய்வதைக் குறித்து அவற்றை நீந்த முடியும் என்றும் நம்பிக்கையை ஊட்டுகிறார். குருவின் வழிகாட்டுதல் கொடுப்பது - நம்பிக்கை, துணிவு, வலிமை, நெஞ்சுரம். எல்லாவற்றையும் சுட்டிக் காட்டிச் சுகத்தன்மையைக் கூறுகிறார் வள்ளுவர். 9. கோள்இல் பொறியில் குணம் இலவேஎண்குணத்தான் பொருள் விளக்கம்: கோள் இல் = வலிமையில்லாத பொறி = ஐம்புலன்களால் இன்குணம் இலவே - இனிய நலம் எதுவும் ஏற்பட்டு விடாது. எண்குணத்தான் = அதுபோலவே எட்டுவிதப் பண்பாட்டு ஒழுக்கங்களை உடைய குருவின் தாளை = ஞானமுறைகளை வணங்கா = வழிபட்டு பின்பற்றி ஒழுகாதவர்க்கு தலை = எந்தப் பெருமையும் ஏற்படாது சொல் விளக்கம்: கோள்- கோட்பாடு, வலிமை; தாளை - ஞானமுறைகளை தலை = எந்தப் பெருமையும் ஏற்படாது. முற்கால உரை: தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலை உடையவல்ல எண்வகைப் பட்ட குணங்களையுடையானது தாள்களை வணங்காத தலைகள். தற்கால உரை: இயக்கம் இல்லா பொறிகளால் பயனில்லை, அதுபோல், எண்ணிப் போற்றும் நற்குணங்களை எல்லாம், ஒருங்கே கொண்டவனை வணங்காத தலையாலும் பயனில்லை. புதிய உரை: உரிமை இல்லாத ஐம்புலன்களால் இனிய நலன்கள் ஏற்பட்டுவிடா. அதுபோல எட்டுவிதப் பண்பாடு ஒழுக்க முடைய குருவின் ஞான முறைகளைப் பின்பற்றி ஒழுகாதவர்க்கு எந்தப் பெருமையும் வாரா.