பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முதிர்ச்சி உடையவன். ஒப்புரவில் எழுச்சி உள்ளவன். பிறர் மகிழ்வது கண்டு, மகிழ்ச்சி அடைபவன். நிரம்பியிருக்கிற நீரைக் கொண்ட குளம் வருவோர் யாரென்று பார்ப்பதில்லை. குலம், கோத்திரம், பகை நட்பு பெரியவர் சிறியவர் என்று பார்ப்பதில்லை. மதித்தும் துதித்தும் வருபவர்கள்மனம் குளிர உதவுகின்ற பாங்கு ஊருணிக்கு உண்டென்பதால், அதையே ஒப்புரவாளருக்கு உவமை காட்டினார். நீர் என்ற சொல்லுக்கு அமுதம் என்று ஒர் அர்த்தம். நீண்ட நாள் உயிர் காக்கும் குணம் அமுதத்திற்கு உண்டு என்று, கதைகள் பல புராணங்களில், காவியங்களில் கூறப்படுவதுண்டு. அ + முதம் என்று அமுதம் பிரிகின்றது. அ என்றால் அகமும் புறமும் என்பார்கள். முதம் என்றால் மகிழ்ச்சி என்பார்கள். உடலுக்குத் தாகம் தீர்த்து, ஏற்படுத்துகிற மகிழ்ச்சி புற மகிழ்ச்சி. மனத்துக்குத் திருப்தியை அளிக்கிற மனமகிழ்ச்சி அகமகிழ்ச்சி. அதுபோலவே வந்தார்க்கு வரவேற்பு தந்தும், விரும்பியதை ஈந்தும், இல்லாமையைப் போக்கி, நல்லாண்மையை ஏற்படுத்துகிற பேரறிவாளன் வாழ்க்கை இயற்கைபோல, செயல் ஒழுக்கத்திற்குச் சான்றாக அமைந்திருக்கிறது என்று 5 வது குறளில் அழகாக எடுத்துக் காட்டுகின்றார். 216. பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின் பொருள் விளக்கம்: பயன்மரம் = இனிய பழங்களைத் தருகின்ற மரம் உள்ளுர் - ஊரின் நடுவே பழுத்தற்றால் = பழுத்து பயன்படுவதுபோல, நயன் உடையான் = இரக்கம் மிகுந்த கொடையாளியின் செல்வம் - செழுமை மிக்க வாழ்க்கையானது கண்படின் = யாவர்க்கும் (ஞானத்தின்) நற்கொடையாக அமையும்.