பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 313 புதிய உரை: பெருமைக்குரியவனது வாழ்க்கையானது, வானம் வழங்குகிற அமுதக் கொடைபோல, எல்லோருக்கும் உதவி மகிழ்விப்பதாகும். விளக்கம்: 5 வது குறளில் ஒப்புரவாளனின் உயர்தரமான உதவிகளை, ஊருணிக்கும், 6வது குறளில் பழ மரத்திற்கும் ஒப்பிட்டுப் புகழ்ந்த வள்ளுவர் 7 வது குறளில் வானத்திற்கு ஒப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் மரத்தையே ஏன் அவர் உவமை காட்டவேண்டும் என்று சிந்திக்கிறபோது, மரம் என்ற சொல்லுக்கு வானம் என்ற ஒரு பொருள் இருப்பதை அறிந்து, வள்ளுவரின் தமிழ்ப் புலமையையும், சொல்லைப் பயன் படுத்தும் திறமையையும் வாயார வாழ்த்தியே மகிழ்கிறோம். இயற்கையின் உயிர்க் கூறான நீருக்கும், இயற்கையின் இனிய வளர்பான மரத்திற்கும் மரியாதைதந்து உவமித்த வள்ளுவர், மூன்றாவது தடவையாக, வானத்தைக் கூறுகிறார். வானமானது வையக மக்களுக்கு வெளிச்சம், வெப்பம், காற்று, மழை என்ற அனைத்தும் அன்றாடம் அளித்து வாழச் செய்கிற சீர்மையை, மேன்மையைத்தான், பெருந்தகையானுக்கு நேர்ப்படுத்தி நவில்கின்றார். வானத்திலிருந்து வெளிப்படுகிற எல்லாமே, மக்களின் உடலை வளர்ப்பதற்கும், மனத்தை மகிழ் விப்பதற்குமே உதவுவதால்தான், வானத்தின் கொடையை மருந்து என அழைக்கிறார். நோய் தீர்க்கும் மருந்தானது, நலம் வளர்க்கும் துணையாகவும் அமையுமல்லவா! அமுதம்தான் மருந்தாக இங்கே குறிக்கப்படுகிறது. உள்ளும் புறமும் ஏற்படும் மகிழ்ச்சியையே அமுதம் என்கிறோம். அந்த மகிழ்ச்சியை வானமானது, தினந்தினம் தந்து கொண்டேயிருக்கிறது. தவறாமல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது என்றும் அதன் கொடை தப்பாது அதன்