பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/315

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


314 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கொடைக்கு ஒப்பேது என்பதைத்தான் மருந்தாகித் தப் பாத வானம் போல, பெருந்த கையான் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. இதற்கும் மேலே ஒப்புரவாளரின் உன்னத நெஞ்சத்தின் பெருமையை எப்படிக் கூற முடியும்? 218.இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி அவர். பொருள் விளக்கம்: இடன் பருவத்தும் = வாழ்க்கையில் தக்க நிலைமை (இல்லறத்தில்) இல் = இல்லாதபோதும், கடன் அறி = அதற்கான காரணத்தை அறிந்துகொள்கிற காட்சியவர் = அறிவாளர்கள் ஒப்புரவிற்கு = மற்றவர்கள் (மனம் குளிர) பயன்பெற உதவுவதற்கு ஒல்கார் = மனமடங்க மாட்டார்கள். சொல் விளக்கம்: இடன் = வாழ்க்கை, செல்வம்; இல் = இல்லறம், இன்மை கடன் = காரணம், முறை, இறை, கடமை காட்சியவர் = அறிஞர்; பருவம் = நிலைமை முற்கால உரை: தாம் செய்யத் தகுவனவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார் செல்வம் சுருங்கிய காலத்தும், ஒப்புரவு செய்தற்குத் தளரார். தற்கால உலை: தம் பிறவியின் நோக்கத்தை அறிந்து கொண்ட அறிவாளர், தம்மிடம் உதவும் வாய்ப்பு இல்லாதபோதும், உலகுக்கு உதவும் செயல்பாட்டில் தளரார். புதிய உரை: வாழ்க்கை இல்லற சூழ்நிலையில், தக்க நிலைமை இல்லாதபோது, அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, பிறர்க்கு உதவும் பணியில் தொடர்வர். அந்தக் கடமையில் மனமடங்கமாட்டார்.