பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 317 நல்கூர்ந்தான் என்பதற்கு வறுமையாளன் என்றும் பொருள் உண்டு. வறுமெய் என்பது வறுமை ஆகிறது. வற்றிய மெய், வளமிழந்த மெய், வாழ்வை வதைத்துக் கொண்டு வதங்குகிற மெய் தான் வறுமெய் ஆயிற்று. வாழ்க்கைச் சூழலில் உடல் நலிவுறுவதும், நோய்க்கு ஆளாவதும் இயற்கையல்லவா. செல்வம் மிகுதி கூட, நோய்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்துவதும் இயற்கைதானே! அப்படிப்பட்ட, உடல் கேடுகள் உண்டானாலும் கூட, மனம் சோர்ந்து போகாமல், மற்றவர்க்கு உதவுகிற குணம் மாறுபடாமல், மடங்கிவிடாமல், தொடர்ந்து செய்கிற உதவிகளைத் துணிந்து செய்வார்கள் ஒப்புரவாளர்கள். அவர்கள் ஆற்றுகிற அரிய உதவிகளுக்கும், போற்றுகிற புனிதப் பணிகளும், வறுமெய்யானது இடையூறுகளை விளைவிக்காது. அப்படி விளைவித்தாலும், அதற்குரிய பயனை இடையூறுகள் பெற முடியாது. அனைத்தையும் மீறி, ஒப்புரவாளன், உயர்ந்த தொண்டான ஒப்புரவினை வைத்துக் கொள்வான். வளர்த்துக் கொள்வான். மற்றவர்களையும் மகிழ்வித்து மகிழ்வான் என்று ஒப்புரவாளனது திண்மையான மனத்தின் தேர்ந்த நல்வினையை, 9 ஆம் குறளில் குறித்துக் காட்டுகின்றார். 220. ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. பொருள் விளக்கம்: ஒப்புரவினால் = உயர்ந்த உலகத் தொண்டாற்றலின் காரணமாக கேடெனின் கழிவும், சிதைவும் போன்ற கெடுதல்கள் வரும் பொறாமை கொண்டவர்களால் ஏற்படும். அஃது ஒருவன்- அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒப்புரவாளனாகிய ஒப்பற்றவன் கோள் விற்று = ஏற்பட்ட தீமைகளைப் புறந்தள்ளுகிற தக்கது தகுந்த செயல்களைச் செய்து துடைத்து அழித்து, வெல்லுவான்.