பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 29 விளக்கம்: - கோள்: கோட்பாடு, கொள்கை, வலிமை என்று பல பொருட்கள். இன்குணம் என்றால் இனிய குணம் என்று பொருள். குணம் என்றால் தன்மை, ஒழுக்கம், தகுதி, திறன், இயல்பு, எண்குணம் என்பது எட்டு விதமான நலப் பண்புகள். 1 தனிமை 2. முனிவில்லாமை 3. இடனறிந்து ஒழுகுதல் 4. பொழுதறிதல் 5.உறுவது தெரிதல் 6. இறுவது அஞ்சாமை 7. ஈட்டல் 8. பகுத்தல். ஒரு மனிதனுக்குத் தேவையான உயர்ந்த குணநலன்கள் மேற்கூறிய எட்டும் இருக்க வேண்டும். இவற்றைச் சாதாரணமாகக் கடை பிடிப்பவர் மனிதர். சிறப்பானவர் புனிதர். செம்மையானவர்தான் மோன குருவானவர். இப்படிப்பட்ட இதயகுருவை வணங்காத தலையானது வாழாத நிலை தானே! வணங்குதல் என்ற சொல்லுக்குக் காணல், கைகூப்பல், தெண்டனிடுதல், தொழுதல், பணிதல், பரவுதல், பார்த்தல், போற்றுதல், வந்தித்தல், வழிபடல் என்று பல பொருள்கள் உண்டு. தலை என்றால் தலைமை, பெருமை முதல் நிலை அதிகாரம் ஆக எண் குணங்கள்! எல்லாம் பெற்றிருக்கும் மோன குருவினைப் பார்த்தும் பரவசப்பட்டும் உணர்ந்தும், ஒழுகியும் வந்தித்தும் வழிபட்டும் கொள்ளாத (தலை) அறிவு பயனில்லையே! அது எப்படி என்றால், உலகைக் காட்டுகிற உயர்ந்த ஆற்றல் மிக்க பொறிகள் வலிமையற்றுப் போனால், வாழ்வே சூனியமாகிவிடுவது போல். ஐம்பொறிகளை வலிமையுடையதாக வளர்க்க வேண்டும். அதேசமயத்தில் அவற்றை வைத்துக் கட்டியாளவேண்டும். இப்படித் தருகிற ஞானவானின் இயல்பு களில் ஒழுகாதவர்க்குத் தலைமை நிலை வராது. பெருமை சூழாது. முதல் நிலை அமையாது என்கிற குறிப்பைத்தான் இந்த 9வது குறளில் வள்ளுவர் வகுத்துக் கூறுகிறார். 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். பொருள் விளக்கம்: = பிற மற்றை (அற்பமல்லாத) வி = அறிவானது பெருங்கடல் = பெரிய கடல்போல் பெருகிவிடும்போது (அதனை