பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-புதிய_உரை 319 - - - - | அத்தகைய ஆற்றலாளன், இழிஞர்கள் ஏற்படுத்திவிடுகிற தீமைகளை, இடர்ப்படுத்தும் இடையூறுகளை, புன்மை மதியால் புறந்துற்றலை யெல்லாம் புரிந்து கொண்டு, அவற்றை அகற்றவும், அழிக்கவும், நீக்கவும், தன் தொண்டை நிலை நாட்டவும் கூடிய தகுந்த காரியங்களைச் செய்து வெல்வான். பிறர் இழைக்கும் கேடுகளைப் போட்டியாக நினைக்காமல், புறந்தள்ளி வென்று, தன் புனிதப் பணிகளைத் தொடர்வான். ஆகவே, உடலால், மனத்தால், ஆத்ம பலத்தால்தான் ஒப்புரவுப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும். உடல் அழிவோ, மனச் சிதைவோ, ஆத்மாவின் குறையோ, அதனால் விளைகின்ற வ்றுமையோ, எதுவாக இருந்தாலும் ஒப்புரவாளன் தளர மாட்டான், தொண்டாற்றத் தயங்க மாட்டான். சிறந்தன செய்பவன், தகுந்தனசெய்வான், தன் பணியில் தீவிரம் காட்டி, உலக வாழ்க்கையில் ஒருவனாகத் - தலைவனாக வாழ்கிறான் என்று ஒப்புரவு அதிகாரத்தை முடித்து வைக்கிறார்.