பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 321 ஒரு பொருள் பொதிந்த சொல்லைத் தமிழறிஞர்கள் படைத்திருக்கின்றனர். s கை என்றால் ஒழுக்கம் என்று பொருள். ஒழுக்கம் என்கிறபோது, உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம் என இரண்டாகப் பிரிகிறது. உடலாலும் ஒருவரை அவமானப்படுத்தலாம். மனத்தால், அது அளிக்கின்ற சொல்லால் கேவலப்படுத்தலாம். அப்படியும் சோர்ந்து விடாமல், ஈதலைச் செய்ய வேண்டும். அதுதான் உயர்ந்த பண்பாளர்களின் ஒப்புரவுத் தன்மை. அதனால்தான், ஒப்புரவு என்னும் அதிகாரத்தை விளக்கிவிட்டு, அதில் பண்பாளர்களின் பெருமையை குறிப்பிட்டுக் காட்டி, அதன் தொடர்பாக, ஈவதில் உள்ள இதமான வழக்கத்தைப் பின்பற்றிப் பெருமையைச் சேர்த்துக் கொள்ள ஈகை எனும் அதிகாரத்தை வைத்துள்ளார். இல்லாத மக்கள் ஈயாகப் பறப்பார்கள். தேனியாகத் திரிவார்கள். வண்டாகக் கிடந்து குடைவார்கள். அதுதான் ஈ என்னும் சொல்லுக்கு அர்த்தமாகின்றது. அப்படி அல்லல்படும் மனிதர்களுக்கு ஆதரவு தருவதுதான் கொடை அளிப்பது வள்ளல் தன்மை. செய்வது தியாகம். தொழிலோ மேகம் போன்றது என்ற சீரிய கருத்துக்களையே ஈகை எனும் அதிகாரமாகத் தந்திருக்கிறார்.