பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 221. வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. பொருள் விளக்கம்: வறியார்க்கு = (உடலில் மனதில், வாழ்வில்) வலிமையற்று வருபவருக்கு ஒன்று ஈவதே - அவருக்குத் தேவை என்று விரும்புவதைத் தருவதே ஈகை =வரையாக் கொடையாகும் மற்றெல்லாம் விரும்பாததை வழங்குவது எதிர்ப்பை = எதிர்பார்த்தவரிடம் குறி = தன் பெருமையைச் சுட்டிக் காட்டி முன்னறிவிக்கும் நீரது உடைத்து = குணம் கொண்டதாக அமையும். சொல் விளக்கம்: ஈகை = வரையாக் கொடை, வள்ளண்மை குறி = சுட்டிக்காட்டு, முன்னறிவி, நன்னடத்தை, ஒழுக்கம் எதிர்ப்பை - எதிர்ப்பட்டவருக்கு (தன் நிறம் காட்ட) நீரது = குணம், ஒன்று, பொருந்து, முற்கால உரை: ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே, பிறர்க்குக் கொடுத்தலாவது. அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பை கொடுக்கும் நீர்மை உடைத்து. - தற்கால உரை: இல்லாதவர்களுக்குப் பயனை எதிர்பார்க்காமல் பொருளைக் கொடுப்பதுதான் ஈகை ஆகும். மற்றக் கொடுக்கல் எல்லாம் ஏதோ ஒரு பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையனவாகும். புதிய உரை: வாழ்க்கையில் வறுமைப் பட்டு வந்த வருக்கு, தேவைப் படுகிற பொருந்துகிற ஒன்றைத் தருவதே கொடையாகும். வேறொன்றைத் தருவது, வந்தவர்முன், தன் பெருமையைப் பறைசாற்றி மேற்கொள்கின்ற (குணமாகவே) முயற்சியாகவே அது அமையும்.