பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-புதிய_உரை - *-*. 32.3 விளக்கம்: வறியார் என்னும் சொல் எதைக் குறிக்கிறது? வறுமையாளர். எதில் அவர் வறுமையாளராயிருக்கிறார்? உடல் வறுமையா? மனவெறுமையா? பொருள் வறுமையா? வாழ்வே வறுமையா? அதை அறிந்து கொள்வதுதான் அருளாளரின் கடமையாகும். ஒன்று ஈவதே என்று அடுத்து வருகிற இரண்டு சொற்களும், மிக அருமையான, நுண்மையான குறிப்பொன்றைக் கூறுகிறது. ஈவது என்று முடிவு செய்தவருக்கு எதை ஈவது? எப்படி ஈவது என்பதில்தான், புத்திசாலித்தனமும் அனுபவமும் பொதிந்திருக்கிறது. ஒன்று என்பதற்குப் பொருந்துதல் என்று பொருள். வந்தவருக்கு உதவும் படியான, பொருந்துகிற ஒன்றைத்தான் தரவேண்டும். அதுவே ஈகை என்றால், ஈயும் அன்பர் தருவது பொருள் கொடையா, அருள் கொடையா, அறிவுக் கொடையா, வழி காட்டும் மாண்பா? ஆகவே, வற்றிய உடல் என்றால், விருந்து. முற்றிய வறுமை என்றால் பணம் பற்றிய தொழிலுக்குப் பாதுகாப்பு என்று பொருந்துகிறதைத் தருவதுதான், துயர்தீர்க்கும் வள்ளண்மையாகும். இல்லாவிட்டால், எதிர்பார்க்காமல் தன்னிடம் இருப்பதைத் தருகிறபோது, அவரது வசதியையும், வளத்தையும், புகழையும், பறை சாற்றுவதாகவே அமையும். எதிர்காலத்தில் ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற பயன் கருதி, பரோபகாரத்தையே பாழாக்கிவிடும் செயலாய் அது அமையும் என்று வள்ளுவர் முதல் குறளிலேயே, முத்தாய்ப்பாக ஈகையின் இலக்கணத்தை வடிவாக்கித் தருகிறார். 222. நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம் இல்எனினும் ஈதலே நன்று. பொருள் விளக்கம்: நல்லாறு எனினும் - நல்ல பயன் கிடைக்கும் என்றாலும் கொளல் = பிறரிடம் உள்ள பொருளை வவ்வுதல். (ஈகை என்ற பெயரில்)