பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தீது = பாவச் செயலாகும் மேல் உலகம் = வாழ்க்கையில் மேம்பட்ட மக்கள் (அறிவுள்ளோரும் கூட) இல்எனினும் தேவையென்பார்க்குத் தரமறுப்பார்கள். ஈதலே நன்று = என்றாலும், பொருந்தும் உதவிகளை ஈவதே பெருமைக்குரிய அறமாகும். சொல் விளக்கம்: நல்லாறு = நல்ல பயன் கொளல் - வவ்வுதல், வாருதல், கவர்தல், கொள்ளுதல் தீது = பாவம், உடம்பு, மரணம். மேல் = மேலிருப்போர், மேம்பட்ட உலகம் = மக்கள், சிறந்தோர்; நன்று = நன்மை, சுகம், பெருமை. முற்கால உரை: ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறியென்பார் உளராயினும் அது தீது. ஈந்தார்க்கு அவ்வுலகம் எய்துதல் இல்லை என்பார் உளராயினும் ஈதலே நன்று. தற்கால உரை: பிறரிடமிருந்து ஒன்றைக் கொடையாகப் பெறுதல் நல்வழியே என்று ஒருவர் கூறினாலும், அவ்வாறு கொள்ளுதல் தீயது, கொடுத்தலான் புகழுலகம் இல்லையென்றாலும் ஒருவர் தடுத்தாலும் கொடுத்தலே நல்லது. புதிய உரை: ஈவோரிடம், நல்ல பயன் கிடைக்கும் என்று, அவர் வழங்குவதை வவ்வுதலும் கவர்தலும் பாவச் செயலாகும். சில மேல்நிலை மக்கள் ஈவதில்லை என்று மறுப்பார்கள். ஆனால் ஈதலே பெருமைக்குரிய செயலாகும். அது பெறுவோர்க்கும் தருவோர்க்கும் சுகம் பயக்கும். விளக்கம்: கொளல் தீது என்பது, பிறரிடம் ஏமாற்றிப் பொருள் பெறுவது. அதனால் தான் கவர்தல், வவ்வுதல், வாருதல் என்று அர்த்தம் தருகிற கொளல் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். மக்கள் எல்லோருக்குமே, பிறருக்கு உதவுகிற குணம் இருப்பதில்லை. வாழ்வில் எல்லா வளங்களையும் வசதிகளையும்