பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 325 பெற்றிருக்கிறபோதும், பிறருக்கு ஈவதைப் பொறுப்பதில்லை. எச்சில்கையால் கூட காக்கையை விரட்டமாட்டார்கள் என்னும் பழமொழிக்கு ஏற்ப, செல்வர்கள், அறிஞர்கள், மேல்நிலைக்கு உயர்ந்தவர்கள், உயர் பதவியில் உள்ளவர்கள் இருப்பார்கள் என்பதைக் குறிக்கவே மேல் உலகம் என்றார். எல்லாம் இருப்பவராக இருப்பது வேறு. இரக்கப்படுவது வேறு, எடுத்துக் கொடுப்பது வேறு. கொடுக்கின்ற குணம், கருணை மனத்தின் உச்ச நிலை. ஆகவே தான், மேல் உலகம் என்று காட்டி, அது இல் எனினும் அந்த மேல் உலகமே இல்லை என்று ஈய மறுத்தாலும், ஈவது என்பது நன்று என்றார். மேல் உலகத்தார், தாங்கள் மட்டும் சுகம் பெற்று வாழ வேண்டும் என்று, சுய நலத்துடன் வாழ்கிறார்களே என்று ஆதங்கப்படும் வள்ளுவர், ஈதலே நன்று என்று ஏகாரம் இட்டுப்பாடுகின்றார். ஈதலே சுகம் என்கிறார். தே.வயென்று தேடி வந்து தயங்கி நின்று, தயவை வென்று பெறுபவர்க்கு, எது கிடைத்தாலும் மகிழ்ச்சிதான், சுகம்தான், அதுவல்ல முக்கியம். தன் பொருளைத் தரும் தியாக மனப்பான்மையிலும், ஈந்துவக்கும் செயலில் தான் சுகம் இருக்கிறது என்று வளம் உள்ளவர்கள் நலம் காக்க, 2 வது குறளில் வழி காட்டுகிறார். ஈகை என்றாலே தியாகம் என்னும் ஒரு பொருள் இருப்பதை வள்ளுவர், வலியுறுத்திக் காட்டியிருக்கிறார். 223. இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள. பொருள் விளக்கம்: இலன் என்னும் - எதுவும் இல்லையென்று தன்னைப் பற்றி கூறுவானை எவ்வம் உரையாமை இகழ்ச்சியாகப் பேசாமல் ஈதல் = பொருந்துகிற உதவிகளைச் செய்தல் குல்ன் உடையான் - பண்பான உயர் குலத்தில் உள்ளவன் கண்ணே உள - இடத்திலே இருக்கிறது.