பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


326 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: இலன் - வறிய நிலை எவ்வம் = இகழ்ச்சி, வெறுப்பு, கபடம், துன்பம் குலன் - குலத்தினன். முற்கால உரை: யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவாலை, பிறர்கண் சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு, மாற்றாதீதலும் இவை இரண்டும் குடிப்பிறந்தான் கண்ணே உள்ளன. தற்கால உரை: இரந்து வருபவனிடம் தான் வறுமை உடையவன் என்னும் துன்பம் தரும் சொல்லைக் கூறாது கொடுப்பது என்பது, உயர்ந்த குடிப்பிறந்தவனிடம் மட்டுமே இருக்கும். புதிய உரை: எதுவும் இல்லாத வறியவன் தன்னிடம் இல்லையென்று கூறுவதைக் கேட்டு, இகழ்ச்சியாகப் பேசாமல், வேண்டியதை வழங்குகிற குணம், உயர்குலமகன் என்னும் இடதிற்கு உயர்த்துகிறது. விளக்கம்: இலன் எனும் சொல், எதுவுமே இல்லாதவன். வசதியிலே வறியவன், வளத்திலே குறைந்தவன், வாழ்க்கையை இழந்தவன், வழியேதும் அறியாதவன் என்பதைக் குறிக்கிறது. நொந்து போய்த் தன்னிடம் வந்து நிற்கிற ஒருவனைப் பார்த்து, இகழ்ச்சியாகப் பேசாமல் இருப்பது பெருந்தன்மை மட்டுமன்று; பேராண்மையாகும். வறியவனை இழிவாக நோக்குவது, வெறுப்பாக கினைப்பது, துன்பம் துளைத்தெடுப்பது போல, அலட்சியமாகப் பேசுவது, கபடமாகச் சிறிப்பது எல்லாம், சாதாரணமானவர்கள் செய்கிற சில்லறைத் தனமாகும். ஆனால், அப்படி எண்ணாமல், வெறுப்புற்றுப் பேசாமல், மனம் இரங்கி, தேவையை அறிந்து கொண்டு. அவனது துன்ப நிலையைப் புரிந்து கொண்டு. ஈயும் இதயத்தான். தன் உயர்குலப் பெருமையை உடையான். அதாவது ககள் க் த ப. . டான்.