பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 3.27 குலப்பெருமையைக் காப்பவன் ஆவதால், அவன்தான் வழி வந்த குலத்தின் பெருமையை மேலும் உயர்த்துகிறான். குலன் உடையான் கண் என்கிறார் வள்ளுவர். குலப் பெருமையை உடைத்து அழிக்காத உடல் கொண்டவன், சிறந்த மனிதர்களிலும் சீர்மை மிக்கப் புனிதன் என்று வள்ளுவர் புகழ்கிறார். உயர்ந்த குடியில் பிறந்தாலும், அவன் உயர்ந்தகுலமகன்தான் என்று அவனை மேலும் உயர்த்துகிறது என்று இழிவாகப் பேசாத நாவையும், இதமாக வழங்குகிற கரங்களையும் வள்ளுவர், மிகவும் அருமையாக எடுத்துக்காட்டுகிறார். 224. இன்னாது திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. பொருள் விளக்கம்: இன்னாது - வறியவர் மனதுக்கு கீழ்மையான தீமைகள் நேராமல் இரக்கப்படுதல் = உருக்கமான தயை செய்தல் (என்பது) இரந்தவர் = வேண்டி விரும்பி வந்த (வறியவரின்) வரின் இன்முகம் காணும் = முகமானது மகழ்ச்சி அடைகிற அளவு = மட்டும் உதவ வேண்டும். சொல் விளக்கம்: இன்னாது = கீழ்மையான தீமை இரக்கம் = தயை, உருக்கம் உணர்வு அளவு = மட்டும், வரையறை முற்கால உரை: ஒரு பொருளை இரந்தவர். அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகம் காணுமளவும் ஈதல் வேண்டும். என்றாலும் இரத்தலே அன்றி, இரக்கப்படுதலும் இனிதன்று. தற்கால உரை: ஒன்றை வேண்டி வந்தவர், அதனைப் பெற்றதனால் இனிய முகத்தவராகத் தோன்றுவதைக் காணும்வரை, கொடுப்பவர்க்கு இரக்கப்படுதலும் துன்பமானதே. புதிய உரை: வந்த வறியவர் மனம் புண்படாமல் உருக்கமான தயவு காட்டுவது அவரின் முகம் மகிழ்ச்சியைக் காணும் அளவுக்கு ஈந்து உதவுவதே ஈகையின் பெருமையாகும்.