பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: இன்னாது இரக்கப்படுதல் என்பது, துன்பம் கொடுக்காமல், வறியவர்மேல் உருக்கம் கொள்ளுதல். எண்ணத்தால், முகபாவத்தால், சொல்லால், செயலால் துன்புறுத்தக் கூடாது, என்று மூன்றாவது குறளில் எவ்வம் உரையாமை என்றார். எண்ணுவதே த வெறு. எண்ணியது பேசுவது தவறு. பேசியதைச் செயல்படுத்துவது தவறு என்று ஒன்றன்பின் ஒன்றாக மனித மனத்தின் மாசுகளையும், மாண்புகளையும் வள்ளுவர் வகுத்துத் தொகுத்துக் காட்டுகின்றார். ஏன் இன்னாது இரக்கப்பட வேண்டும் என்றார்? மனித மனத்தை முகந்து காட்டும் மனித முகம், உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஏனெனில் உணர்வுகளை உருக்கமாக வெளிப்படுத்துகிற வகையில்தான் முகம் அமைந்திருக்கிறது. உடலில் மற்ற உறுப்புக்கள் எல்லாம் நீண்ட மற்றும் குட்டையான தசைகளைாலும், நீண்ட எலும்புகள், குட்டை எலும்புகளாலும் ஆனவையாகும். ஆனால் முகத்தின் தசைகள் ஓரங்குலம், அதற்கும் குறைந்த அளவு கொண்ட 32 குறுந்தசைத் துண்டுகளாலும், 14 சிறு சிறு எலும்புகள் இணைப்பாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், நவரச பாவங்களை முகம் வெளிப்படுத்திக் காட்ட முடிகிறது. இரந்தார்க்கு எவ்வளவு உதவலாம் என்றால், இன்முகம் காணும் அளவு என்கிறார். ஏற்பவர் அகம் குளிர்ந்து, மனம் மகிழ்ந்து இனிமையாகத் தெரியும் அதாவது விரியும் அளவுக்கு உதவ வேண்டும் என்கிறார். அளவு எவ்வளவு என்றால், அதை நான்காகப் பிரித்துச் சொல்வார்கள். எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்பது அளவின் விரிவுகள். எண்ணித்தரலாம் பணத்தை. எடுத்துத்தரலாம் பொருளை. முகந்துதரலாம் தானியங்களை நீட்டித்தரலாம் துணிமணிகளை. இப்படி இருப்பதைக் கொடுத்து, ஏற்பவரை திருப்திபடுத்துகிறபோது. அவர் முகம் இன்முகமாகிறது. ஆகவே, இனிய செயல் வேண்டும். இரக்கப்படுவதில் உருக்கம் காட்ட வேண்டும். கொடுப்பதில் குறையளவு வேண்டாம் என்று ஈகையின் வாகைத் தன்மையை நான்காம் குறளில் நறுக்குத் தெறிந்தாற் போல் வள்ளுவர் கூறுகின்றார்.