பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - வெற்றிகரமாகக் கடக்க) இறைவனடி = மோன குருவின் ஞானம் என்னும் தார் = பெரும்படையைத் துணையாகக் கொண்டவர். நீந்துவர் = நீந்திக் கடந்து வெற்றி பெறுவர். சேரா = அறிவிழந்து மதிமயங்குவர் நீந்தார் = நீந்திக் கரை சேர மாட்டார். சொல் விளக்கம்: வி = அறிவு; இறைவன் = மோன குருவின் ஞானம் தார் = பெரும்படை முற்கால உரை: இறைவன் என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய், அதனுள் அழுந்துவர். தற்கால உரை: இறைவனின் வழியைப் பின்பற்றிக் கொண்டவர் பேதைமை என்று சொல்லப்படும் பெரிய கடலை எளிதில் கடப்பர்; பிறர் கடவார். புதிய உரை: அறிவு பெரிய கடலாய்ப் பெருகும் போது மோன குருவின் ஞானம் என்னும் பெரும் படையைத் துணையாகக் கொண்டவர் நீந்திக் கடந்து வெற்றி பெறுவர். அறிவிழந்து மதிமயங்குவார் அதனை நீந்திக் கரை சேரமாட்டார். விளக்கம்: - உடலுக்கும் உயிர்க்கும் உறுதுணையாக விளங்கும் நல்லறிவு நீங்கலாக உள்ள மற்றைய அறிவுகள் பெருங்கடலாய்ச் சூழ்ந்து பேராபத்தைப் பிறப்பிக்கிற பொழுது, அதிலிருந்து வெற்றிகரமாக வெளியேற, மோனகுருவின் ஞானப்படையைத் துணையாக கொண்டால் கடப்பர். மதிமயங்கி அறிவிழந்து நிற்பவர் துன்பக் கடலில் இருந்து கடந்து வெளியேற மாட்டார். துயரில் மூழ்கிப் போவார். பிற வி = நலம் பயக்காத மற்றைய அறிவு பெருங்கடல் = துயர்க்கடல் (துயரின் மிகுதி) இறைவன் அடி = மோன குருவின் ஞானம் தார்= மாலை என்றும், சேனை படை என்றும், உபாயம் ஒழுங்கு என்றும் பொருள் உண்டு. - ** - சேரா - என்றால் மதி மயங்குதல், அறிவழிதல் என்று பொருள்.