பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 29 225. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். பொருள் விளக்கம்: ஆற்றுவார் - எடுத்ததை முடிக்க வல்லாரின் ஆற்றல் = வலிமை மிக்க முயற்சியானது பசியாற்றல் = பசித்து வருபவரின் பசியைத் தணிப்பதேயாகும் மாற்றுவார் மாற்று வழி கண்டு தீர்த்து வைப்பார் ஆற்றலின் பின் = முயற்சியின் சக்திக்கே பெருமை சேர்க்கும். சொல் விளக்கம்: ஆற்றுவார் = எடுத்தது முடிக்க வல்லார் ஆற்றல் = முயற்சி, பொறுமை, வலிமை, சக்தி பின் = பெருமை, பின்புறம். முற்கால உரை: தவத்தான் வலியார்க்கு வலியாவது, தம்மையுற்ற பசியைப் பொறுத்தல். அவ்வலிதான் அங்ங்னம் பொறுத்தற்கரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். தற்கால உரை: துன்பத்தைத் தாங்குவார் வலிமையுள், பசித்துன்பம் தாங்குதலே வலியது. ஆனால், அவ் வலிமையும் பசித்துயர் இல்லாமல், போக்கும் கொடையாளர் வலிமைக்குப் பிற்பட்டதே. புதிய உரை: எடுத்ததை முடிக்கும் வல்லமையாளர், பசியுடன் தம்மிடம் வந்தவரின் பசிபோக்கும் முயற்சி பாராட்டுக்குரியதே. ஆனால் வந்தவரின் பசியைத் தீர்த்து வைத்து, வழிகண்டு உதவுகிறபோது, அவரது வலிமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் முயற்சியாகி விடுகிறது. விளக்கம்: பசி என்பது பாவமல்ல. உடம்பில் உயிர்ப்புடன் விளங்குகிற உத்வேக உணர்வு. இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள்ளாக வந்து போகும் நெருப்பு. அதாவது உணவைத் தகிக்கும் அனல். உணவு கேட்கும் வேட்கை.