பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 3.31 சொல் விளக்கம்: அற்றார் = தரித்திரர், இறந்தோர்; அழிபசி = அழிக்கின்ற அக்கினி தீர்த்தல் = நீக்குதல், ஒழித்தல் பொருள் பொன், உடல், முதல், தலைமை, குணம் வைப்புழி = வையகத்தில் ஒரிடம் முற்கால உரை: வறியாரது மிக்கப் பசியை, அறம் நோக்கித் தீர்க்க பொருள் பெற்றான் ஒருவன், தனக்குதவ வைக்குமிடம் அவ்வறமாகலான். தற்கால உரை: - வறுமைப்பட்டாரது நலங்களையெல்லாம் அழிக்கும் பசியை நீக்குக. அவ்வாறு நீக்குதலே, பொருளைப் பெற்றுள்ள ஒருவன், தன் பொருளைப் பாதுகாப்பாகச் சேர்த்து வைக்கத்தக்க இடமாகும். புதிய உரை: வந்த வறியவரது அழித்தொழிக்கும் பசியை, நீக்குகிற அந்த ஒப்பற்ற கொடையாளன், வையகத்திலே தலைமை இடம் பெறுகிற நற்பேறினைப் பெறுகிறான். விளக்கம்: வறியவனை அற்றார் என்கிறார் வள்ளுவர். உலக வாழ்க்கை சுகமெல்லாம் அற்றுப்போய், இற்றுப்போன இழிந்த நிலைக்கு ஆளானவன். இல்லையே என்று அவன் மனம் அலையவில்லை. குலையவில்லை. ஆனால், அவன் வயிற்றிலே விளைந்து வீறிட்டுக் கிளம்புகிற பசியானது, அவனை வெறுமையாக்குகிறது. வற்றல் ஆக்குகிறது அற்பமான மனிதனாக மாற்றி விடுகிறது. அப்படிப்பட்டதை அழிபசி என்கிறார். ஆமாம் உடலையும். மனதையும் அழித்துப்போடுகிற ஆற்றல் பெற்றது பசி, அதனைத் தீர்த்தல் என்று ஒரு அருமையான சொல்லை இங்கே இடுகிறார். தீர்த்தல் என்கிறபோது தீர்ப்புச் செய்தல். அதாவது, பாழாக்கும் பசியே! ஒழிந்துபோ திரும்பவும் வராதே! தொந்தரவு தராதே! என்று எக்காளமிட்டு அழித்து வெற்றிகொள்ளும் வீர நிலை.