பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/336

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 335 தற்கால உரை: தம் பொருளை வறியவர்க்குக் கொடாது சேர்த்து வைத்தும், பிறர் கொண்டுபோக இழக்கும் கொடியவர், கொடுத்து மகிழும் இன்பத்தை அறிய மாட்டாரோ! புதிய உரை: கொடுப்பதை முதல் நாள் துவக்குகின்ற இன்பம் எவ்வளவு பெரியது என்பதை அறியாமல் பிதற்றி வாழ்கின்ற கொடிய மனம் கொண்டவர், தன்னுடைய பொருளைக் காத்து இழக்கின்ற கீழ்மையாளராகவும் ஆகிவிடுகின்றார். விளக்கம்: வன்கண் அவர் என்னும் சொற்களில் வள்ளுவர், ஈயாத பாவிகள் என்று மிகத் துல்லியமாகத் தெரிவித்து விடுகின்றார். வன் - கொடுமையான, கண் = உடல். கொடுமையான உடல், கொடுமையான மனம கொண்டவர்கள், பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மனிதர்கள் ஆவ ார்கள். பிறர்க்குக் கொடுப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. எத்தனை முறை கொடுத்துக் கொண்டே வந்தாலும், அதை முதல் தடவை. இன்று தான் ஈதலைத் தொடங்கியிருக்கிறோம் என்று எண்ணி, முதல் நாளில் பெறுகின்ற இன்பம் இருக்கிறதே, அதை ஈடிலா இன்பம், பேரின்பம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட இன்ப நிலையை, இனிய கலையை அறியாதவர்களை கொல் என்கிறார். கொல்வது என்று ஒர் அர்த்தம். ஆனால் அவர் கொல்லச் சொல்லவில்லை. அவர்கள் அந்த இன்பத்தை அறியாமல், தான் செல்வந்தர் என்று அலட்டிக் கொண்டும், பேதமையால் பிதற்றிக் கொண்டும் அலைகின்றார்கள். h அவர்கள் இழப்பது ஈத்துவக்கும் இன்பத்தை மட்டுமன்று. எல்லாமே பொருள் தான் என்று எண்ணி, புதையலைக் காக்கிற பூதம் என்பார்களே, அது போல் முடங்கி வாழ்ந்து, இன்பக் காலத்தை இழந்து, துன்பச் சூழலில் உழன்று, சோர்ந்து விழ்வார்கள் என்பதையே வைத்திழக்கும் என்றார். இருந்தும் இல்லாத நிலையில் உழல்பவர்கள் என்பதையே வண் கண்ணராக வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்வின் நோக்கமும்