பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பெருமையும் புரியாத பேதைகளாக நடமாடுகின்றார்கள் என, 8வது குறளில் இருந்தும் திருந்தாத மக்களின் இயல்பைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். 229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். பொருள் விளக்கம்: தமியர் தாமே இணையில்லாதவர் என்று (தற்பெருமையோடு) தாமே உணல் தானே தனித்து உண்டு மகிழும் தன்மையானது மன்ற தமது தோற்றத்திலும், வாழ்வு நிலையிலும் நிரப்பிய குறைபாடுள்ளவராய், தரித்திரர்போல் ஆகி இரத்தலின் - வறியவர் பிறரிடம் சென்று ஏந்தி இரப்பதைவிட இன்னாது = இகழ்ச்சியான வாழ்வாகும். சொல் விளக்கம்: தமியர் = இணையில்லாதவர். மன்ற தோற்றம்; நிரப்பிய = தரித்திரம், குறைபாடு, நிறை. முற்கால உரை: பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது, தாமே தனித்து உண்டல், ஒருவருக்குப் பிறர்பாற் சென்று இரத்தலினும் இன்னாது ஒரு தலையாகும். தற்கால உரை: நிரம்ப தேடிச் சேர்த்தப் பொருளைத் தாம் மட்டுமே தமியராய் இருந்து உண்ணுதல், உறுதியாக இல்லை என, இரத்தலினும் கொடுமையானதேயாகும். புதிய உரை: யாரும் தனக்கு இணையில்லை என்னும் தலைக்கனத்தோடு, தாமே தனித்து உண்டு வாழ்வது, தரித்திரமான தோற்றத்துடன், அவர் பிறரிடம் சென்று பிச்சையெடுத்து உண்பதை விடக் கேவலமானதாகும். விளக்கம்: வசதியும் வளம் இருப்பதால், ஒருவர் எப்படி வேண்டுமானாலும் எண்ணிவாழ்வது, இழிவான வாழ்வு என்று வள்ளுவர் இங்கே 9 வது குறளில், கடுமையாகச் சாடியுள்ளார்.