பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/338

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 337 தமியர் என்றால் ஏகமானவர். அதாவது தானே தான் எல்லாம், நமக்கு நிகர் நாமே என்று ஒரு பொருள். நமக்கு யாரும் ஒப்பானவர் இல்லை. நிகரானவர் இல்லை என்று நாத்தழும்பேற பேசுகிற நாணமில்லாத நிலை. அப்படிப்பட்ட ஆணவத்துடன் வாழ்கிறவர் அன்றாட உணவை எப்படி உண்ணுகிறார்? தமியராக தமியர் என்பதற்குத் தனிமை என்றும், கதியின்மை என்றும் வேறுபல பொருள்களும் உண்டு. பெரும் செல்வந்தர் ஏன் தனிமைப்பட்டிருக்கிறார்? ஈயாததால். இரக்கமனம் இல்லாததால். அவருக்கு வேறுகதியே கிடையாது. தனிமைப்பட்டு, கதியிழந்து, அலைபாய் கிற நிலைமையைத்தான் தமியர் என்னும் சொல் குறிக்கிறது. ஆகவே, தாமே தமியராக இருந்து உண்ணுகிறார். எப்படி? வறியவன் பிறரிடம் சென்று பெற்ற உணவை, தனியே இருந்து உண்ணுவதுபோலச் செல்வத்தின் அழகு சுற்றத்தோடு உண்ணல். வறியவனுக்குச் சுற்றம் இல்லை. ஏனெனில், அவனது வறுமை, உலகியலிலிருந்து தனியே பிரித்து விடுகிறது. வேறுபடுத்தி விடுகிறது. அதுபோல, நிரப்பிய பொருள் கொண்டவன், தரித்திரன் போலத் தனியே விடப்படுகிறான். அவனது தோற்றமும் தரித்திரத் தோற்றம். அதைத்தான் மன்ற என்ற சொல்லில் அழகாகக் குறிக்கிறார். அவன் பிச்சைக்காரன் போல தனியே உண்ணும் நிலை. இரத்தலின் இன்னாது என்கிறார் வள்ளுவர். இரத்தலே கொடுமை என்றால், அதிலும் கொடுமை இன்னாது என்று. கொடுக்கப் பிறந்தவன், கொடிய மனத்தால் கூனிக் குறுகி வாழ்வதற்குரிய நிலைமை வந்ததே என்று செல்வந்தரின் ஈயா சிந்தையின் இயல்பையும், அவர்கள் பெறுகிற அவமான வாழ்வையும், அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். 230. சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் - ஈதல் இயையாக் கடை பொருள் விளக்கம்: தில்லை - ஆசைப் பெருக்குடன் (விழைவுடன்) இனித - நன்மை பயக்கின்ற