பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 31 2. வான் சிறப்பு உலகம் பகவனால் உண்டாயிற்று. உண்டான உலகம் இரண்டாகப் பிரிந்துகொண்டது. கீழே மண்ணுலகம், மேலே விண்ணுலகம் என்று விரிந்து நின்றது. இரண்டு உலகமும் பஞ்ச பூதங்களைத் தங்களிடம் வைத்துக் கொண்டதால் இயற்கை எனப் பெயர் பெற்றது. பஞ்சம் என்றால் ஐந்து. நிலம், வான், நீர், காற்று, நெருப்பு என்னும் ஐந்தும் சேர்ந்ததால் உலகைப் பெருமைப் படுத்திப் பேசுகிறோம். நிலத்தின் வளமும், நீரின் ஒட்டமும், காற்றின் நிறைவும், நெருப்பின் வெப்பமும், வானின்தன்மையும் கொண்டே உடல் உருவாக்கப் பட்டிருப்பதால், உடலும், உலகமும் ஒன்றிணைந்தே இயங்குகின்றன; முழங்குகின்றன. மண்ணுலகத்திற்கு மகிமை மக்கள் தொகுதி. அவர்களை வழி நடத்தும் மாபெரும் பெருமை ஞான குருமார்களின் பகுதி, அவர்களைக் கடவுளர்களாக மாற்ற வேண்டிய கடமையை இயற்கையே ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த இனிய பணிகளைத்தான் வானுலகம் போற்றி ஏற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு உயிர்ப்பூட்டக் காற்று; உணர்வூட்ட வெப்பம்; உணர்ந்து கொள்ள ஓசை; உண்மையைப் புரிந்துகொள்ள ஞானம். இவற்றை எல்லாம் பஞ்ச பூதங்கள் மூலமாக, ஐம்புலன்களுக்கு வழங்கித் தலையாய பணிகளைத் தொடர்கின்றது. வானுலகை வட்டமிட்டு வசமாக்கிக் கொண்டு வலம்வரும் காற்று. அப்படிப்பட்ட இரண்டு காற்றுகள் இணைகிறபோது நீராகிறது. காற்றும் கடலும் சேர்கிறபோது நெருப்பாகிறது. காற்றும் இயக்கமும் சேர்கிறபோது ஒசையாகிறது. இவ்வாறு வான்மண்டலம் முழுதும் மக்களை வாழ்விக்கிற மணி மண்டலமாக மாறி வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே தான் மக்களை வாழ்விக்கின்ற வான் பெருமையைப் பற்றி பகவனுக்கு அடுத்த தாகப் பெருமைப்பட வான் சிறப்பு என்று அதிகாரத்தை வைத்திருக்கின்ற வள்ளுவரின் ஞானமே ஞானம்!